லொறி விபத்தில் சாரதி படுகாயம்

பாதெனிய – அநுராதபுரம் பிரதான வீதியில் அம்பகஸ்வெவ பிரதேசத்தில் லொறி ஒன்று(30) விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி சாரதியின் நித்திரை காரணமாக அருகில் இருந்த மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் லொறியின் சாரதி படுகாயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

நாட்டின் காலநிலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம் – அவதானம் தேவை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (மே 30) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மாகாணத்திலும், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்…

Read More

கரம் போர்ட் ஊழல் – சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் 20 வருட சிறைத்தண்டனைக்கு எதிராக அவரது சட்டத்தரணிகள் இன்று மேல்முறையீடு செய்வார்கள் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் (PHU) பொதுச்செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில, சட்டத்தரணிகளுடனான உரையாடலின் போது, ​​நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கவில்லை என்று அவர்கள் கூறியதாகக் தெரிவித்தார். நீண்ட காலத்திற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “நீதித்துறையையோ அல்லது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தையோ…

Read More

மட்டுப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு விநியோகம் – புதிய அறிவிப்பு

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை, (30.05.2025) முடிவடையும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் 2.6. 2025 முதல், ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள், காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். முன்பதிவு செய்தல் அல்லது அவசரத் தேவைகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கும் இந்த சேவையின்…

Read More

இலங்கையில் நாளுக்கு நாள் குறைந்து வரும் தங்க விலை!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்க விலை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 263,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 241,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 197,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு…

Read More

இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி – வொஷிங்டனில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தலைமையிலான குழு அமெரிக்கா சென்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு விடுத்த அழைப்பின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இருநாட்டுப் பிரதிநிதிகளும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான…

Read More

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.  இருப்பினும் ஏனைய வகுப்பு சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவார்கள் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.  துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை அறிவித்துள்ளது.

Read More

நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு, தலாதுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  2 நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மற்ற நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  துப்பாக்கிச் சூட்டில் எந்த உயிர் பலியும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட 2 நபர்களையும் கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் அந்த துப்பாக்கிக்கு…

Read More

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Read More