ஜனாதிபதிக்கு வியட்நாமில் சிறப்பு வரவேற்பு

வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (04) அதிகாலை வியட்நாமில் உள்ள நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி இன்று முதல் 6 ஆம் திகதி வரை வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. நொய் பாய் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை ஜனாதிபதி மற்றும் குழுவினரை வியட்நாமின் வெளியுறவு பிரதி அமைச்சர் நுயென் மன் குவோங்,…

Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அரநாயக்க பொலிஸ் பிரிவின் அரம பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டில் உள்ள அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை பொலிஸார்…

Read More

குடும்பத்தகராறில் பெண்ணொருவர் கொலை

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தங்காலை பொலிஸ் பிரிவின் பொலொன்மாருவ வடக்கு பகுதியில் நேற்று (03) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More

ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் கூறுகின்றனர். உலகளவில் 100,000 பேரில் 3,340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச நோய் வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். எதிர்வரும் 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்திய நிபுணர் இதனைக் குறிப்பிட்டார். “இன்ஹேலர்” சிகிச்சையானது…

Read More

சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது. அதன்படி, இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். 339 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு தொடங்க உள்ளதுடன், 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில்…

Read More

ஜூனில் மின் கட்டண அதிகரிப்பு – உறுதிப்படுத்திய ஜனாதிபதி

2025 ஜூன் மாதத்தில் மின்சார கட்டண திருத்தத்தின் போது, கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் ஒன்றின்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுடன் இணைந்து, இந்த செலவு – மின்சார விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படுவதை அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் மீன்பிடித் துறை போன்ற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, திறைசேரி மூலம் நிவாரணம் வழங்க முடியும். ஆனால் தொடர்ந்தும் திறைசேரி, இலங்கை மின்சார சபைக்கு காலவரையின்றி…

Read More

எட்டு வயது குழந்தையை தவிக்கவிட்டு தப்பியோடிய தாய் – வெலிஓயாவில் சம்பம்

வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் வசிக்கும் பெண்ணொருவருக்கு நீதிமன்றம் மூலம் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்து. இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீடு தேடிச் சென்ற போது அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த எட்டு வயதுக்குழந்தையை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து வந்தனர். அதன் பின் குழந்தையின் தாயார் வந்து பொலிஸில் சரணடைந்த பின்னரே குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வினவியபோது குழந்தையின் தாயார் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் குழந்தை தனிமையில் இருந்த…

Read More

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும் பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளித்த…

Read More

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருகோணமலை – ஈச்சிலம்பற்று – சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் மரணித்தனர். காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. அவரை மீட்க முற்பட்ட அவரது மகளின் கணவரான 27 வயதுடைய இளைஞரும் மின்சார தாக்கத்துக்கு உள்ளானார். பின்னர் அவர்கள் இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை அறிக்கையில்…

Read More

பாழடைந்த காணியிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானை-மஹிந்தாராம வீதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் கடந்த 30 ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், வீடு திரும்பாத காரணத்தினால் இது குறித்து அவரது சகோதரர்களில் ஒருவர் கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். சடலம் நீதவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக…

Read More