மக்களைக் கொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது? நாமல் ராஜபக்ஷ

1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் தற்போது கொலை அலை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் தந்தையர்களைக் கொல்லும் கலாச்சாரம் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எமது கட்சியின்…

Read More

தேர்தலை முன்னிட்டு மே 5, 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை

மே 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, மே 7 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் அனைத்தும் 04.05.2025ஆம் திகதி தொடர்புடைய கிராம சேவக அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான மேசைகள், கதிரைகள்…

Read More

அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.  நாளைய தினமும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், காவல்துறை திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.  மேலும், அஞ்சல் மூல…

Read More

சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால் விசாரணை – பொலிஸாரின் அறிவித்தல்

உந்துருளியில் பயணிக்காத ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Read More

அமெரிக்காவுடனான தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி

இலங்கை மீது அமெரிக்கா விதித்த ‘உயர் தீர்வை வரியை’ திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக இரு தரப்பினரும் கூட்டு அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பலர் எம்மிடம் கேட்கிறார்கள், நீங்கள் திருடாவிட்டாலும் அதனை செய்தவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று. இது குறித்து இன்று காலையும் நான் சட்டமா…

Read More

நாட்டின் இன்றைய காலநிலை

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில்…

Read More

வைத்தியர்களுக்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்கள்

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த வேளை, குறித்த நபரின் மகன் மற்றும் அவரது…

Read More

ரணிலின் முகத்தை பார்க்காதீர்கள், தலைக்குள் உள்ள மூளையை பாருங்கள் – ராஜித சேனாரத்ன

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். கோத்தபய இரவில் குழியில் விழுந்தார். பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில்…

Read More

டேன் பிரியசாத் கொலைக்கும் சகோதரரின் கொலைக்கும் தொடர்பா?

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.  இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.  இந்த கோரிக்கையை…

Read More