முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்

Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 20 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு நகரத்தின் பிரதான கடற்கரையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமானது. “சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப்…

Read More

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 25 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி…

Read More

நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை

ஹிக்கடுவ நாரிகம கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் இறந்தவர் 38 வயதான ரஷ்ய நாட்டவர் என்பதுடன் அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக இலங்கைக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிர்காப்பாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது.

Read More

கிளிநொச்சியில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ள தேங்காய் உற்பத்தி

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தென்னை செய்கையில் பெறப்படும் தேங்காயின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதனால் தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் வெண் ஈ தாக்கம் காரணமாக பல தடவைகள் மருந்துகள் தெளிக்கப்பட்டிருந்த போதிலும் பிரயோசனமற்ற நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

இவ்வாண்டில் இதுவரை 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட 05 சம்பவங்கள் உட்பட மொத்தமாக 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வும் , இந்த வருடத்தில் இடம்பெற்ற 17 சம்பவங்களுக்கு இதுவரை விசாரணைகளை நிறைவடைந்துள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். தென் மற்றும் மேல் மாகாணங்களில் அதிகளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நிலவும் அதிக வெப்பம் தொடர்பில் புதிய அறிவிப்பு

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டி இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அவதான மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

Read More

15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில்…

Read More

வனப்பகுதில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன்

ஹம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனத்தில் ஊரனிய பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து சிறுவன் ஒருவனைபோலிஸார் மீட்டுள்ளனர் நேற்று (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்த போது, 12 வயது சிறுவன், பூந்தல தேசிய வனத்தின் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் சிறுவனை ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இந்தக் சிறுவன் குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும், வனப்பகுதிக்குள் சிறுவன் எவ்வாறு சென்றார்…

Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர்களுக்கு தடுப்பு காவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியையும் மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு, சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

Read More

சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு.

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான ம‍கா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக் மட்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள பாடசாலைகளில் 27ம் திகதி வழக்கம் போல் கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிழக்கு ஆளுநர் அறிவிப்பு. விடுமுறை நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை தொடர்ந்துவரும் சனிக்கிழமை(மார்ச் 1) அன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More