மண்மேட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி

பெல்மடுல்ல, புலத்வெல்கொட பகுதியில் நேற்று (08) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் புட்டுஹபுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் சுவர் ஒன்றை அமைப்பதற்காக வந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில்…

Read More

நாட்டில் கடும் மழைக்கு வாய்ப்பு

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, தென், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும்…

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (ஏப்ரல் 08) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஏப்ரல் 01ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

Read More

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,…

Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஏப்ரல் 07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(ஏப்ரல் 07) இரவு வாயு…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் 4வது ஆம் கட்ட நிதிக்கான மதிப்பாய்வு கலந்துரையாடல்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினருக்கு இடையே நேற்று(ஏப்ரல் 7) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 4வது ஆம் கட்ட நிதிக்கான மதிப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

Read More

புத்தாண்டின் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும் இம்முறை 333,183 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும். அவர்களில் 253,390 மாணவர்கள் பாடசாலை ஊடாகவும், 79,793 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தொற்றியதாகவும் குறிப்பிட்டார். இப்பரீட்சைகள் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31…

Read More

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – பொலிஸில் சரணடைந்த இருவர்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று (07) குறித்த சந்தேக நபர்கள் இரு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  சந்தேக…

Read More

இலங்கை பொலிஸில் மாற்றம் அவசியம்

சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.  சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை  பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.  களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும்  …

Read More