இலங்கையின் சனத்தொகை பரம்பலில் முதலிடம் மேல்மாகாணம்..!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று ( ஏப்ரல் 07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் படி , இலங்கையின் மொத்த சனத் தொகை இரண்டு கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகும். இவ் 15 வது தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2025 பெப்ரவரி…

Read More

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (ஏப்ரல்07) பிற்பகல் 01.30 மணியளவில் ஆஜராகியிருந்தார். இதன்போது, மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

Read More

நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 33,992 மோட்டார் சைக்கிள்கள், 530 கார்கள் முறையே ஜனவரி 111 , பெப்ரவரி 92, மார்ச் 327ஆகா பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 195 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் 74,410 வாகனங்கள்…

Read More

யாழ்ப்பாணம் சுழிபுரம் இடுகாடு தனியாருக்கு சொந்தமானதா? – விசனதம் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள்

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 க்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் உடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில்…

Read More

தேசிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர 38 வயதில் திடீரென உயிரிழந்துள்ளார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

IceWarp Expands into Sri Lanka, Fostering European Innovation in Collaboration with FentonsIT

IceWarp, a global leader in business communication solutions, has officially launched its cutting-edge platform in Sri Lanka, bringing European expertise in email and collaboration solutions to support the country’s evolving business landscape. This expansion is driven by a strategic partnership with Fentons Information Technology (FIT), the Information Technology arm of Hayleys Fentons Limited. The grand…

Read More

மித்ர விபூஷண விருதுக்கு நன்றி தெரிவித்த மோடி

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இன்று…

Read More

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டத்திற்காக குறித்த அரச அதிகாரிகள் அடுத்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Read More

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தீப்பரவல்

ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதுடன், பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Read More

அநுராதபுரத்திற்கு விஜயம் செய்யும் இந்திய பிரமர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இன்று காலை 8.30 முதல் 11 மணி வரை அநுராதபுர நகர், ஜய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து நிலையத்தை அண்மித்த பிரதான…

Read More