நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

இன்று (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும்…

Read More

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் நிவாரண பொதிகள்

பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும். நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம். 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும். இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் அண்மையில்…

Read More

நாட்டின் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேலும் விளக்கிய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ, “இந்த நிலைமை…

Read More

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரொருவர் மீது இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த நபருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக இருந்த வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச்…

Read More

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு சத்தியம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் 50 மி.மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்….

Read More

அரசியல் தலைவர்களின் ரமழான் வாழ்த்துச் செய்தி

பொதுமக்களின் நிதி மற்றும் அரச சொத்துக்களை அழிக்கும் அநாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்குப் பதிலாக, எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் மக்களின் உணர்வுகளை உணரக் கூடிய ஒரு அரசியல் கலாசாரத்தையும் பிரஜைகள் சமூகத்தையும் நாட்டில் கட்டியெழுப்புவதற்கான நமது முயற்சிகளில் ரமழான் மாத செயற்பாடுகள் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத கால நோன்பு நோற்று, தலைப்பிறை பார்த்ததன் பின்னர் கொண்டாடப்படும்…

Read More

இன்று புனித நோன்பு பெருநாள்

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.  இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற முஸ்லிம்கள் இன்று(10) ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமிய சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது.  புனித ரமழான் மாதத்தில் விழித்திருந்து, பசித்திருந்து, ஒருமாத காலமாக நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். …

Read More

சாதாரணதர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரலில் ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஏப்ரல் 10ஆம் திகதி நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விடைத்தாள் மதிப்பீட்டில் சுமார் 15,000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

IPL தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Read More

போலி இலக்கத்தகடுகளை தயாரித்த ஒருவர் கைது

சீதுவ பகுதியில் போலி இலக்கத்தகடுகளை தயாரிக்கும் நிலையத்தை முற்றுகையிட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று (29) மேற்கொண்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் 56 வயதுடைய நபரே கைதாகியுள்ளார். மேலும் இதன்போது 3 போலி இலக்கத் தகடுகள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முத்திரை பதித்த ஸ்டிக்கர்கள், தேசிய சின்னம் பொறித்த 67 ஸ்டிக்கர்கள் மற்றும் இலக்கத் தகடுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களை…

Read More