CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் நாளை(31) அழைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான…

Read More

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை தாக்கியவர் கைது

கேகாலை வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (28) பிற்பகல் கேகாலை பொது வைத்தியசாலையின் முன்னாள் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக விசேட வைத்திய நிபுணரை குறித்த நபர் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியில் வசிக்கும் 29 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த வைத்தியர் தற்போது கேகாலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட…

Read More

வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவின் தம்மென்னாவ – உப்புல்தெனிய வீதியின் கட்டுகெலியாவ பகுதியில், சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி, பெண் ஒருவர் மற்றும் பின் இருக்கையில் இருந்த இரண்டு ஆண்கள், அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார். உபுல்தெனிய பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

133 தேர்தல் முறைப்பாடுகளுக்கு தீர்வு

இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வன்முறைச் செயல்கள் தொடர்பாக ஒரு முறைப்பாடும், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 179 முறைப்பாடுகளும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. பெறப்பட்ட 180 முறைப்பாடுகளில் இதுவரை 133 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 47 முறைப்பாடுகளை…

Read More

மாத்தளை பகுதியில் T56 ரக துப்பாக்கி ஒன்று மீட்பு

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுது கங்கை வனப்பகுதியில் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, ​​நேற்று (29) மாலை இந்த துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த இடத்தில் T-56 துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…

Read More

இந்தியாவைக் காப்பாற்றுவதோ , மோடியைக் காப்பாற்றுவதோ எங்கள் நோக்கமல்ல

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வுக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் உரையாடலை மேற்கொள்ளவுள்ளார் என்றார். இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவர் பிரச்சினைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல….

Read More

தேசப்பந்துக்கு உதவிய நபருக்கு நீதிமன்றத்தால் பிணை

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருக்க உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

ரமழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரமழான் பண்டிகைக்காக முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஏப்ரல் முதலாம் திகதியும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இந்த ஆண்டின் கடந்த 3 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 1.03 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அத்துடன் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.1 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Read More

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறந்து வைப்பு

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.  இந்த தொழிற்சாலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்தார்.  1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்று முதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆனையிறவு…

Read More