சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவு.

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் நேற்று(மார்ச் 25) தெரிவு செய்யப்பட்டார். நேற்று (மார்ச் 25) நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர்,யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டில் சட்டமாணி பட்டத்தினைப் பெற்று, 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவலுக்கான காரணம் வெளியானது

நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று மீண்டும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட மீனவ சமூகம் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளன.  கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததன்…

Read More

19 சொகுசு ரக வாகனங்களை சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவு கட்டமைப்பிற்குப் போலி தகவல்களை வழங்கிப் பதிவைப் பெற்றதுடன் சுங்கத்திற்கு உரிய வரிப் பணத்தைச் செலுத்தாது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 19 சொகுசு ரக வாகனங்களை விசாரணைகளுக்காகச் சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை

எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை…

Read More

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

Read More

ஆளும் கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான ப்ராடோ ரக சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த வாகனம் இன்று (மார்ச் 25) பிலியந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுசந்த தொடாவத்தை வேறு பெண்களுடன் முறைகேடான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது…

Read More

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வு பழைய பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று (மார்ச் 25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டலும் வழங்கப்பட்டது. மாணவர்…

Read More

“சிவாகம கலாநிதி இணுவில் தர்ம சாஸ்தா தானு மஹாதேவ பெருந்தகை இன்று சிவபதமடைந்தார்”

அந்தணர்களின் உயர்வுக்காக பெரிதும் பாடுபட்டவர், குருகுல கல்விமுறை தொடக்கம் பல்வேறு வகையான கல்வி இலக்குகளை அடுத்த சமுதாயத்திற்கு எடுத்து சென்ற சிவாகம கலாநிதி இணுவில் தர்ம சாஸ்தா பெருந்தகை இன்று சிவபதமடைந்தார். பாரதத்தின் மைந்தனாக, பல்மொழி ஆளுமை மிக்கவராக, அன்புடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளராக திகழ்ந்தவர். யார் எந்த உதவி கேட்டாலும் உடனே தயங்காமல் அதற்கு வழிவகுப்பார். ஒரு ஆசான் எப்படி வாழ வேண்டும் என முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டியவர். இந்தியாவில் உள்ள ஆதீனங்கள், குருகுல அதிபர்கள் உள்ளிட்ட…

Read More

தேவேந்திரமுனை இரட்டைக் கொலை தொடர்பில் வெளியான தகவல்

மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவத்துக்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, ரீ-56 ரக துப்பாக்கியும் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியும் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். அதன்படி, சம்பவ இடத்திலிருந்து குறித்த கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன. இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு மாத்தறை…

Read More

தென்னை உரிமையாளர்களுக்கான புதிய அறிவிப்பு

தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.  இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்

Read More