பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட சிறப்பு அறிவிப்பு

பிரதமர் உட்பட நாட்டின் முக்கிய நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கிரிப்டோகரன்சி வணிகங்களுக்கான விளம்பரங்கள் தவறானவை என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த மோசடி விளம்பரங்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் போலி விளம்பரங்களை ஊக்குவிப்பதற்குப் பின்னால் வெளிநாட்டு நிறுவனங்கள் இருப்பதாகவும் இந்த நாட்டில் பிரபலங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உடைப்பதே இதன் நோக்கம் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும்…

Read More

சட்டவிரோதமாக ராணுவத்தை விட்டு வெளியேறியவர்கள் கைது.

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறிய 875 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 704 வீரர்களும், இராணுவத்திலிருந்து தப்பியோடிய இரண்டு அதிகாரிகளும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடற்படையினரிடமிருந்து தப்பிச் சென்று கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் விமானப்படையிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறிய 100 பேரும் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

வாகன இறக்குமதிக்காக கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக இதுவரை 150 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை மீள நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் பேரவையின் 26ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதிக்காக வங்கிகள் திறக்கும் கடன் கடிதங்கள் தினசரி அறிக்கைகள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பொருளாதாரம் பெரிய அதிர்ச்சியை…

Read More

பெண் நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை – சந்தேகநபர் கைது

தெல்லிப்பளை மனநல மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 36 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஒரு தனியார் துப்புரவு சேவையின் மூலம் பணியமர்த்தப்பட்ட சந்தேக நபர், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தின் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இம்மாதம் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேவையான உரிய ஆவணங்களுடன் வருகைதந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

Read More

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (மார்ச் 12) கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும் மற்றும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில்…

Read More

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த விடயம் தொடர்பில் வெலிகம காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணை…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஐஸ்போதைப்பொருளுடன் மிரிஹான பகுதியில் ஒருவர் கைது.

மிரிஹான பொலிஸ் பிரிவின் பிடகோட்டே சந்தியில் நேற்று (மார்ச் 10) 10g 250mg ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

பட்டலந்தை அறிக்கையில் உள்ள பலரின் பெயர்கள் கசிவு.

“பட்டலந்தை சித்திரவதைக் கூடம்” தொடர்பில் காவல்துறை அதிகாரிகளான டக்லஸ் பீரிஸ், நளின் தெல்கொட, மெரில் குணவர்தன ஆகியோர் உட்படப் பலரின் பெயர்கள் பட்டலந்தை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு உள்ளதாக பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆதாரங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறித்த சித்திரவதைக் கூடம் செயற்பட்டு வந்த உரக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான பட்டலந்தை வீடமைப்பு தொகுதி கைத்தொழில் அமைச்சின் கீழ்…

Read More