ஆரம்பமாகும் தவக்காலம்.

Ash Wednesday – திருநீற்றுப் புதன் என்றால் சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுகிற­து. திருநீறு பூசும் நிகழ்ச்சி திருப்பலியின்போது நடத்தப்படுகின்றது. “மனி­தா, மண்ணாய் பிறந்த நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்று கூறி அருட்தந்தையர் நெற்றியில் திருநீற்றைப் பூசுகின்றார்கள்.இந்த சடங்கின் மூலம் இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரமபமாகின்றது. இந்த தவக்காலத்தில் 16 வயதுக்குட்பட்­டவர்கள் சுத்த போசனமும், 18 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாளாவது உண்ணா நோன்பு இருப்பது நன்மை….

Read More

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான பெண்ணை கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு…

Read More

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி…

Read More

முன்னை நாதருக்கு உற்சவம் ஆரம்பம்.

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னை நாதஸ்வர சுவாமி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(மார்ச் 4) செவ்வாய்க்கிழமை சுப வேளையில் ஆலயப் பிரதம குரு தலைமையில் இடம்பெற்றது.

Read More

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்.

இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “maanya mooya” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கான அதற்கான முன்னோட்ட பயணம் இடம்பெற்று , சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார். இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.

Read More

மகளீர் விவகார அமைச்சரின் செயல் மக்களால் வெகுவாக பாராட்டைப்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் வெப்ரவரி 11 தொடக்கம் 16வரை நடைபெற்ற CEDAW உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மகளிர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் ஒதுக்கப்பட்ட செலவுகளுக்காக பணத்தொகையின் மிகுதியை அரசாங்கத்திற்கு 240 அமெரிக்க டாலர்களாக திருப்பி கொடுத்திருக்கின்றார். அதற்கான பற்றுச்சீட்டும் பெறப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, அவருக்கான பாராட்டுகளும் குவிகின்றன.

Read More

ஹட்டன் ஷெனன் தோட்டத்தில் தீ விபத்து

ஹட்டன் ஷெனன் தோட்ட தொகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 7.30 அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஹட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினரின் தீர்மானம்

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் மீண்டும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி, எரிபொருள் ஓர்டர்களைப் பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார். இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் அதேபோல், நாளை (04) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இது தொடர்பாக தமது சங்க…

Read More