ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து…

Read More

ரயில் இயக்கப்படும் அட்டவணையில் திருத்தம்.

இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களின் தொடக்க நேரங்கள் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. காட்டு யானைகள் மோதுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 7 மணிக்கு மட்டக்களப்புக்கு புறப்பட்ட மீனகாயா எக்ஸ்பிரஸ் ரயில், மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் இரவு 11 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

மேலும் சரிவை சந்தித்த தங்கத்தின் விலை.

சந்தையில் தங்கத்தின் விலை முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று (மார்ச் 03) மேலும் குறைந்துள்ளது. அதன்படி, கடந்த வெப்ரவரி மாதம்28 ஆம் தேதி 851,507 ரூபாயாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03) 849,282 ரூபாயாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று, 22 காரட் கொண்ட 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 219,750 ஆக பதிவாகியுள்ளது. 22 காரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.27,470 ஆகவும், 21 காரட் தங்கத்தின் 1…

Read More

ரயிலில் மோதுண்டு அனுராதபுர பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். அனுராதபுர போலிஷ் பிரிவில் ஸ்ரவஸ்திபுர பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது ஸ்ரவஸ்திபுர, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read More

வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த பயிர் நிலங்கள் விவசாயிகள் கவலை.

பொலன்னறுவை உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன. பொலன்னறுவை மாதுரு ஓயா மற்றும் குடுடா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அரலகங்வில 503 பிரதேசம் உட்பட யாய 6 மற்றும் யாய 5 பிரதேசங்களில் நெற்செய்கைகள் சேதமாகியுள்ளன. இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளதாக மகாவலி பி வலயத்தின் 503 பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவரை செட்டிக்குளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் 01 கிலோ 280 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (மார்ச் 02) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் செட்டிகுளம முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு சாத்தியம்.

நாட்டின் கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா…

Read More

மாணவனை தாக்கிய அதிபருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறி, 17 வயது மாணவனால் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்குரிய அதிபர், தலைமுடி வெட்டப்படவில்லை எனவும், கருப்பு நிற காலுறை அணிந்து பாடசாலைக்கு வந்ததாகவும் கூறி குறித்த மாணவனை…

Read More

கீத் நொயார் கடத்தல் விவகாரம் – கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

2008ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் சந்தேகநபர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நவகத்தேகம மற்றும் உலுக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடைய இராணுவ புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் இருவர் ஆவர்.

Read More

வனவிலங்கு சேதத்தை குறைக்க அரசின் புதிய நடவடிக்கை

வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதைத் தடுக்கவும், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் மேலாண்மைக்குத் தேவையான பரிந்துரைகளைப் பெறவும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தக் குழுவின் தலைவராக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் டி. எஸ் ரத்னசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவிற்கு மேலும் 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More