சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 20,000 சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம் பெற்றுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read More

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.எஸ்.துறைராசா, உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Read More

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J.A.S. DE S. ராஜகருணா தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஓர்டர்களை நிறுத்துவதாக எந்த உறுதிப்படுத்தலையும் இதுவரை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

எரிபொருள் விலை குறித்து வௌியான அறிவிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல் 92 ஒரு லீற்றர் 309 ரூபாவுக்கும், பெட்ரோல் 95 ஒரு லீற்றர் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் ஒரு லீற்றர் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 331 ரூபாவுக்கும்…

Read More

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – ஜனாதிபதி

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

நாளை மறுதினம் இலங்கையில் நோன்பு ஆரம்பம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) முதல் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் புனித ரமலான் நோன்பு காலத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய பிறை இன்று தென்படாததால், இவ்வாறு ரம்லான் நோன்பு காலம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. தேர்தல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (28) பிற்பகல் 3.00 மணி முதல் மார்ச் 28 ஆம் திகதி இரவு 10:00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவு…

Read More

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் இத்தாலி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ பிரான்கோவிக்கும் (Damiano Francovigh) இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டத்திற்கு இத்தாலி அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று தூதுவர் டெமியானோ பிராங்கோவிக் தெரிவித்தார். இலங்கையின் சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் முதலீட்டுத் துறைகளுக்கு இத்தாலி அரசாங்கம் வழங்கக் கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இத்தாலியில்…

Read More

புதிய வாகனங்களுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்த கப்பல்

தற்போதைய அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், ஜப்பானில் இருந்து நாட்டிற்கு புதிய வாகனங்களை உள்ளடக்கிய இரண்டாவது கப்பல் இன்று (27) பிற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. JUPITER LEADER என்ற மேற்படி கப்பல், 196 வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஜப்பானில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்று அங்கிருந்து தற்போது நாட்டை வந்தடைந்தது.

Read More

இலங்கையின் துறைமுக முதலீடுகளுக்கு தயாராகும் நெதர்லாந்து

இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் சுற்றுலா, துறைமுகம், முதலீட்டு துறைகளின்…

Read More