டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
Category: SPORTS

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் கொழும்பு கூடைப்பந்தாட்டக் கழகம் பங்கேற்பு.
இந்திய கூடைப்பதாட்ட சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலாவது தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பாக கொழும்பு கூடைப்பந்தாட்ட கழக அணி பங்குபற்றுகிறது. இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து கழகங்கள் பங்குபற்றும் தெற்காசிய கூடைப்பந்தாட்ட சங்க கழக சம்பியன்ஷிப் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது….

ஏப்ரல் மாதத்தில் வருடாந்த Joe-Pete Big Match ஏற்பாடு
கொழும்பு, 25 மார்ச் 2025 – வருடாந்த புனிதர்களின் சமர் என அழைக்கப்படும் 51ஆவது Joe-Pete மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டி தொடர்பில் அறிவிக்கும் உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தில் 2025 மார்ச் 25 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பாடசாலை கிரிக்கட் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டித் தொடராக கருதப்படும் இந்த போட்டித் தொடரின் இந்த ஆண்டின் போட்டிகள் பற்றிய அறிவிப்பு இதன் போது…

புதிய உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. அத்துடன் நேற்றைய தினத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ஓட்டங்களை விளாசியது. இது ஐபிஎல் வரலாற்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை…

கோலாகலமாக ஆரம்பமாகும் IPL திருவிழா
உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) இன்று (22) தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் முந்தைய சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 7.30 க்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணிக்கு அஜிங்க்யா ரஹானே தலைமை தாங்குவார் என்றும், பெங்களூரு அணிக்கு ரஜத் படிதார் தலைமை தாங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

டெல்லி தெருவோரத்தில் கிரிக்கெட் விளையாடிய முக்கிய புள்ளிகள்
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ரோஸ் டெய்லர், கபில் தேவ் மற்றும் அஜாஸ் படேல் ஆகியோர் டெல்லியில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறார்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி
ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் நியூஸ்லாந்து அணியை வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி செம்பியன்சிப் 2025 இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸ்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 16 உதிரிகள் அடங்கலாக 251 ஓட்டங்களை பெற்றுகொண்டது. நிஸ்லாந்து அணி சார்பாக அதிகபட்சமாக தரில் மிட்செல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்திய அணி…

“BATTLE OF THE BLUES” 2025 – வெற்றி சென்.தோமசுக்கு உரித்தானது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நேற்று (மார்ச் 08) முடிவடைந்த 146வது”BATTLE OF THE BLUES” என அழைக்கப்படும் நீலவர்ணங்களின் சமரில் றோயல் கல்லூரியினை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென். தோமஸ் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இதுவரை நடைபெற்ற நீலவர்ணங்களின் சமரில் 36 – 36 என சமநிலையை இரண்டு பாடசாலைகளும் பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் றோயல் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 233 ஓட்டங்களை சவால் மிக்க வெற்றி இலக்காக வைக்க அதை எட்டிப்பிடிக்க இரண்டாவது…

IPL 2025 – சன்ரைசஸ் அணியில் மாற்றம்
2025 IPL மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து பிரைடன் கார்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணி வியான் முல்டரை அணியில் சேர்த்துள்ளது. வியான் முல்டர் 128 T20 போட்டிகளில் விளையாடி 2172 ரன்கள் எடுத்துள்ளதுடன் 67 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

IML T20யில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இலங்கை.
இலங்கை பங்கேற்கும் 2025 IML T20 போட்டியின் 4வது போட்டி இன்று (மார்ச் 06) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை விளையாடவுள்ளது. இந்தியாவின் வதோதராவில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. 2025 IML T20 புள்ளிகள் பட்டியலில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளதுடன் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்திய மாஸ்டர்ஸ் அணி…