இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் பற்றி தெரியவருவதாவது பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (மார்ச் 10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார். மாலை…