சொக்லட்களில் நச்சுப் பொருள் – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

சில வகையான சொக்லட்களில் cadmium எனப்படும் நச்சுப் பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். cadmium மிகவும் ஆபத்தான பண்புகளில் ஒன்றாகும். அது உடலை விட்டு வெளியேற 10-30 ஆண்டுகள் ஆகும். இதனால் இரண்டு தலைமுறைகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், cadmium சொக்லட்டில் மட்டுமல்ல, tortilla மற்றும் உண்ணப்படும் சில மட்டி மீன்களிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மியாமி பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் டெலியா ஷெல்டன், இந்தப் பொருளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது இதய…

Read More

சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற அச்சத்தில் பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்

சீனாவில் 40 வயது மதிப்பக்க பெண் ஒருவர், சூரிய ஒளி பட்டால் கருப்பாகி விடுவோம் என்ற பயத்தில் பல ஆண்டுகளாக வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டுள்ளார். அவர் உச்சி முதல் பாதம் வரை சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர்களும் கண்டு கொள்வதில்லை. சீனாவில் சூரிய ஒளியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் பல வழிமுறைகளை கையாளுகின்றனர். அதன்படி பெண்கள் அகன்ற விளிம்பு கொண்ட முகமூடிகள், சூரிய பாதுகாப்பு கையுறைகள்,…

Read More

நேபாளத்தில் நிலநடுக்கம்

இமயமலையை ஒட்டிய நேபாளத்தில் இன்று அதிகாலை 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவானது. கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. நேபாளத்தில் சில தினங்களுக்கு முன் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

தாய்லாந்தில் அச்சுறுத்தும் கொவிட் தொற்று

தாய்லாந்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் தீவிர அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 33,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது அதிகரிப்பு இரட்டிப்பாகியுள்ளது. தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் குறைந்தது 6,000 கொவிட்-19 சம்பவங்கள் பதிவானதாகக் கூறப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகும்.

Read More

உலக சாதனையை முறியடித்த பிரெஞ்சு நகரம்

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம்,3,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட மிகப்பெரிய ஸ்மர்ஃப் உடையணிந்த மக்கள் கூட்டத்திற்கான புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டானியின் மேற்குப் பகுதியில் உள்ள 16,000 பேர் கொண்ட லாண்டர்னேவ், 2019 ஆம் ஆண்டில் 2,762 ஸ்மர்ஃப்களை ஒன்றிணைத்த ஜெர்மன் நகரமான லாச்ரிங்கனில் இருந்து சாதனையைப் பெற இரண்டு முறை முன்னர் முயற்சித்தது. தற்போது, பிரெஞ்சு ஆர்வலர்கள் இறுதியாக 3,076 பேரை நீல நிற உடைகள் அணிந்து,…

Read More

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 3.65 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 144.96 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த…

Read More

சிங்கப்பூரில் மீண்டும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. LF.7 மற்றும் NB.1.8 எனப்படும் கொவிட்-19 திரிபுகள் அதிகளவில் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறும், விசேட பூஸ்டர் ஊசிகளைப்…

Read More

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள்…

Read More

சுவிஸ் பொருளாதாரம் குறித்து வெளியான ஆய்வுத் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் சுங்கக் கட்டணங்கள், உலக வர்த்தகத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையினால் சுவிட்சர்லாந்தின் பொருளாதார வளர்ச்சியை நெடுங்கால சராசரியைவிடக் குறைவாக காணப்படும் என UBS வங்கி வெளியிட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அறிவித்த சுங்கக் கட்டணங்கள், உலகளாவிய பொருளாதார மந்தநிலையை உருவாக்கவில்லை என்றாலும், வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025ல் சுவிஸ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1% மட்டுமே இருக்கும் என நிபுணர்கள்…

Read More

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 5.56 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.82 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.02 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Read More