IPL இன் இன்றைய முக்கிய இரண்டு போட்டிகள்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் நடைபெறும் குறித்த போட்டியானது, இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் இன்றைய தினத்திற்கான இரண்டாவது போட்டியானது, இரவு 7.30 க்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மருத்துவமனையில் குண்டு வெடிப்பு; 7 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தெற்கு சூடான். இந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பேன்ஹக் நகரில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். தெற்கு சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

Read More

சுற்றுலா வேன் விபத்து – 7 பேர் பலி

அமெரிக்காவின் ஐடாஹோ மாகாணம் யல்லோஸ்டோன் தேசிய பூங்கா அருகே நேற்று மாலை சுற்றுலா வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 14 சுற்றுலா பயணிகள் பயணித்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது வேன் மோதியது. இந்த கோர விபத்தில் வேன் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு…

Read More

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்கு அருகில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு தரை மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூ மெக்சிகோ மற்றும் வடக்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More

விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண்- பணியாளர்கள் செய்த செயல்

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ.ஏ.950 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று புறப்பட தயாரானது. எனினும் அது புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெண் பயணி ஒருவர் எழுந்து விமானத்தின் முன்பகுதிக்கு சென்றுள்ளார். திடீரென விமானி அறையின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் ஆவேசத்துடன், விமான ஊழியர் ஒருவரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார். போர்த்துகீசிய…

Read More

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்

இங்கிலாந்தைச் சேர்ந்த 115 வயதான கேட்டர்ஹாம், உலகின் வயது முதிர்ந்த நபராக அறிவிக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சரேயில் வசிக்கும் எதெல் கேட்டர்ஹாம் என்ற பெண், 115 வருடங்கள் மற்றும் 252 நாட்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் வயதான நபராக இருந்துவந்த பிரித்தானிய பெண்ணான இனா கானபரோ லூகாஸ் (116 வயது) மரணமடைந்ததைத் தொடர்ந்து கேட்டர்ஹாம் தற்போது மிகவும் வயதான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Read More

பதவி விலகினார் தென்கொரிய அதிபர்

தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை அறிவித்த விவகாரம் தொடர்பாக அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் ஹான் டக்-சூ (70), தற்காலிக அதிபராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக் சூ போட்டியிடுகிறார். இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா…

Read More

இஸ்ரேலில் பரவும் காட்டுத்தீ – அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேலின் ஜெருசலேமில் பெரிய அளவிலான காட்டுத் தீ பரவி வருகிறது. ஜெருசலேமின் புறநகரில் பரவி வரும் காட்டுத்தீயால் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 3,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகவில்லை. காட்டுத்தீ பரவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய காட்டுத் தீ இதுவென கூறப்படுகிறது. புதன்கிழமை காலை ஜெருசலேம் மலைகளில் தீ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஐந்து…

Read More

பாகிஸ்தான் வானொலிகளில் இந்திய பாடல்களுக்கு தடை

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் – இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எஃப்எம் வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாக பிபிஏ பொதுச் செயலாளர் ஷகீல் மசூத் அறிவித்தார். பாகிஸ்தானின் தகவல்தொடர்புத் அமைச்சர் அட்டா தரார் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். அவர் PBA-வின் முடிவை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என்று விவரித்தார். இதுபோன்ற சோதனையான காலங்களில்…

Read More

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Read More