காலமானார் போப் பிரான்சிஸ்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ், இன்று காலமானார். 88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக, கடந்த பிப்ரவரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று மார்ச் இறுதியில் வாடிகனுக்குத் திரும்பினார். ஈஸ்டர் தினமான நேற்று வாடிகனில் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, “காஸாவில் போர் நிறுத்தம் வரவேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு போப் பிரான்சிஸ் இறந்துவிட்டதாக வாடிகன் அறிக்கை…

Read More

மனிதர்கள் பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது….

Read More

கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில்…

Read More

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டது

ஈரான் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கும் நிலையை நெருங்கிவிட்டதாக சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஈரான் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கவில்லை என்றும் அவர் கூறினார். ஈரானிடம் தற்போது அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அவர்கள் விரைவில் அதை சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஈரான் அணுகுண்டை உருவாக்க தேவையான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டது. மேலும், உலக சமூகம் அவர்களின் யுரேனிய செறிவூட்டலை அமைதியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்…

Read More

பாம்பை விட்டு கணவரை கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி

குடும்ப உறவுகளில் பரவி வரும் இருண்ட அடித்தளங்களை நினைவூட்டும் விதமாக, இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தில் மற்றொரு கொடூரமான வாழ்க்கைத் துணை கொலை சம்பவம் வெளிவந்துள்ளது. அண்மையில் தனது கணவனை, மனைவி அவரின் சட்டத்திற்கு புறம்பான உறவில் இருந்த காதலனின் உதவியுடன் கொலை செய்து சிமெந்து நிரப்பப்பட்ட கொள்கலனில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீரட்டின் பஹ்சுமா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியால் மர்மமான…

Read More

2028 ஒலிம்பிக்கின் போது ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. 128 வருட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டதிலிருந்து, கிரிக்கெட்டின் ஒலிம்பிக் மறுபிரவேசம் குறித்த உற்சாகம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் ஒன்பதாம் திகதி சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் (ஐ.ஓ.சி) நிர்வாகக் குழு 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டிற்கான வீரர் ஒதுக்கீடுகள் மற்றும் பங்கேற்கும்…

Read More

பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரிவிப்பு

பரஸ்பர வரி விதிப்பை நிறுத்​திய அமெரிக்​கா​வின் செயலை வரவேற்​கும் வித​மாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக 27 உறுப்பு நாடு​களுக்​கான வர்த்​தகத்தை கையாளும் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் நிர்​வாக ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க ஜனாதிபதி பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைத்​ததற்கு இணை​யாக நாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கைகள் எடுப்​பதை ஒத்​திவைக்க முடிவு…

Read More

வெற்றியை சுவீகரித்தது CSK : 5விக்கெட்டுகளில் லக்னோவை வீழ்த்தியது

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ்- லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று சென்னை அணிக்கு 167 வெற்றியிலக்காக நிர்ணயித்தது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள்…

Read More

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இலங்கையில் 2 கோடி வசூல் சாதனை

அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இலங்கையில் முதல் நான்கு நாட்களில் 2 கோடி இலங்கை ரூபாய் (LKR) வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவல் இலங்கையின் உள்ளூர் திரையரங்கு வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட மதிப்பீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் (ஏப்ரல் 10): இலங்கையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படம் 80% ஆக்கிரமிப்புடன் தொடங்கியது. முதல் நாள் வசூல் சுமார் 60-70…

Read More

இலங்கை கடவுச்சீட்டின் மதிப்பு அதிகரிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை கடவுச்சீட்டுக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு தற்போது தரவரிசையில் 43.5 மொத்த மதிப்பெண்களுடன் 168ஆவது இடத்தில் உள்ளது. குறித்த அமைப்பு 199 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கை 171ஆவது இடத்திலிருந்து 3 இடங்கள் முன்னேறி 168ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கடவுச்சீட்டுகளின் வலிமையை அறிவிக்க Nomad Capitalist 5…

Read More