மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.  நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் மக்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து…

Read More

இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, மியான்மாரில் சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Read More

இரவுநேர நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டல் நகரின் டகோமா பகுதியிலுள்ள வீட்டில் நேற்று, இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி, இரவு 12 மணியளவில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், திடீரென அங்கிருந்தவர்கள் மீது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read More

மியன்மார் நிலநடுக்கதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தால் மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே நகருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு…

Read More

X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். 2022 ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். எலான் மஸ்க்தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எக்ஸ் ஏ.ஐ நிறுவனமும் எலான் மஸ்க்குக்கு சொந்தமான நிறுவனமாகும். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன….

Read More

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 144 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.  ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

பங்கொக்கில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பு.

தாய்லாந்தின் – பங்கொக் மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கங்களைத் தொடர்ந்து அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, நிலவும் அவசர நிலையின் காரணமாக இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால், +66 812 498 011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதிகளில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதனை அடுத்து, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான எவ்வித பாதக அறிவிப்பும்…

Read More

ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநரை விடுவித்த இஸ்ரேல்

‘நோ அதர் லேண்ட்'(No other land) என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் “ஹம்தான் பல்லாலை” இஸ்ரேல் இராணுவம் விடுவித்துள்ளது. இவர் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) வைத்து இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இதன்போதே இஸ்ரேலிய வீரர்கள் அவர் அழைத்துசெய்யப்பட்ட வாகனத்தை தாக்கி, ஹம்தான் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு…

Read More

கிராமத்து காவியத்தை திரையில் காட்டிய பாரதிராஜாவின் செல்லப்பைங்கிளி உலகைவிட்டு பிரிந்தது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகன் தாஜ்மஹால் புகழ் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் உயிரிழந்துள்ளார் . அண்மையில் அவருக்கு இருதய அறுவைசிகிச்சை தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிசமுத்திரம், விருமான், மாநாடு போன்ற திரைப்படங்களில் தனித்துத்தெரியும் கதாப்பாத்திரங்களில் நடித்தவர். அப்பா பாரதிராஜாவைப்போல தனது மகனுக்காக “மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை 2023 இயக்கிய அவர் தொடர்ந்து சொந்தமாக திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டிவந்த நிலையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை இடம்பெற்றது. அதில் குணாகி வீடு…

Read More

ஹீத்ரோ விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன . விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் விமான நிலைய நிர்வாகம் நேற்று (21) பெரும்பாலான விமான சேவைகளை நிறுத்தியிருந்தது. ஹீத்ரோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால் சுமார் 2 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More