இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு !!

கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது. பொருளாதார விவகாரங்களுக்கான துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பரதர் இது குறித்து பேசும்போது பாகிஸ்தானின் மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வர்த்தகம்…

Read More

ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் வெற்றியடைந்த 2வது நிறுவனமாக மாறியது ஜெஃப் பெஸோஸின் Blue Origin!. நாசாவின் ‘ESCAPADE’ என்ற இரு விண்கலன்களை செவ்வாய் கிரகத்தை நோக்கி ஏவிய பிறகு, Blue Origin நிறுவனத்தின் New Glenn ராக்கெட் பூஸ்டர் அட்லாண்டிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

Read More

பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு..!!

கண்ணியமே முக்கியம்.. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடனான வர்த்தக வழிதடத்தை முடிந்தவரை புறக்கணித்து பிற நாடுகளிடம் வணிக உறவை அதிகரிக்க ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது….

Read More

இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுரை வழங்கியது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டன் மக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு செல்வதை தவிர்க்குமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read More
Delhi bomb blast

டெல்லி குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரி அடையாளம்!

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலைக் குண்டுதாரியாகச் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் வைத்தியர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளாதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியர் உமர் முகமது, கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டைக்கு அருகே வெடித்த வெள்ளை ஹ_ண்டாய் ஐ 20 காரின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.  சந்தேக நபர், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன், செங்கோட்டைக்கு அருகில் அந்தக் காரை 3 மணி நேரம் நிறுத்தி…

Read More

பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று(ஜூன் 28) அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாக்கிஸ்தானில் கடந்த மதம் மட்டுமே 4.2ரிக்டர் மற்றும் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் வாய்ந்த நிலநடுக்கம் – 6.1 ரிக்டர்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று(ஜூன் 28) 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. டாவோ ஆக்ஸிடென்டல் மாகாணத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் 101 கி.மீ ஆழத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இருந்தபோதிலும் சுனாமி குறித்து எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 ரிக்டர் அளவில்…

Read More

சிரியாவில் உள்ள தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் – 20 பேர் மரணம்

சிரியாவில் பிரார்த்தனை செய்யும் மக்கள் நிறைந்திருந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திற்குள் ஒரு தற்கொலை குண்டுதாரி துப்பாக்கிச் சூடு நடத்தி, வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டமாஸ்கஸின் புறநகரில் உள்ள டுவைலாவில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்திற்குள் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சுகாதார அமைச்சகம் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. தேவாலயத்தின் மீதான தாக்குதல் பல ஆண்டுகளில் சிரியாவில் இதுபோன்ற முதல் முறையாகும். தாக்குதல் குறித்து எந்தக் குழுவும் உடனடியாகப்…

Read More

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் – எண்ணெய் விலை உயர்வு தொடர்பில் நிபுணர்கள் எச்சரிக்கை

ஈரானில் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, எண்ணெய் விலை உயர்வு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிபொருள் விலைகள் நிச்சயமாக உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, நேற்று இரவுக்குள் ஒரு பீப்பாய் உலக எண்ணெய் விலை 7.72 டொலர் உயர்ந்துள்ளது. ஜூன் மாதம் 13ஆம் திகதியன்று இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் விலைகள் சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளன. கச்சா எண்ணெய்க்கான…

Read More