இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு

இணைய வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில், முதன்முறையாக 16 பில்லியன் (1600 கோடி) கடவுச்சொற்கள் திருடு போயிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மில்லியன் கணக்கானோரின் கடவுச்சொற்கள் கசிந்ததால், உலகளவில் அவர்களின் விவரங்களைக் கொண்டு மோசடி, திருட்டு, இணைய வழி திருட்டு முதலானவற்றில் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. கடவுச்சொற்களைத் திருடி, அவற்றை ஹேக்கர்களிடம் கொடுத்து விடுகின்றனர். திருடப்பட்ட கடவுச்சொற்களை டார்க் வெப் (Dark Web) தளங்களில் விற்று, தவறான பயன்பாட்டுக்கு உட்படுத்துகின்றனர். மின்னஞ்சல், கூகுள்,…

Read More

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

வடக்கு ஈரானில் செவ்வாய்க்கிழமை இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செம்னான் மாகாணத்திற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் (23 மைல்) தொலைவில் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை, ஆனால் செம்னான் மாகாணத்தில் உள்ள சோர்கே நகரைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சோர்கேவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர்…

Read More

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் தீவிரமடையும் மோதல் – ஆஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ADF பணியாளர்களும் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார். இந்த நடவடிக்கை இராணுவ ஆதரவை வழங்குவதற்காக அல்ல, பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக மட்டுமே என்று அவர் மேலும் கூறினார். இதுவரை 2000 ஆஸ்திரேலிய குடிமக்கள் ஈரானை விட்டு…

Read More

தீவிரமடையும் மோதல் – ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலா தலைநகர் காரகாஸில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆரீன் மற்றும் வெனிசுலா கொடிகளுடன் ஊர்வலம் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வெனிசுலா உள்துறை அமைச்சர் டியோஸ்டோடா கபெல்லோ, நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்க் குற்றவாளி என ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். வெனிசுலாவும், ஈரானும் மிக…

Read More

ஈரான் – இஸ்ரேலில் இருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றும் நாடுகள்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக பல நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான், செக் குடியரசு, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும். அதற்கமைய, ஆஸ்திரேலியா ஏற்கனவே ஈரானில் இருந்து சுமார் 1,500 குடிமக்களையும் இஸ்ரேலில் இருந்து சுமார் 1,200 மக்களையும் வெளியேற்றியுள்ளது. சில ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே இஸ்ரேலை விட்டு சைப்ரஸுக்கு கப்பல் மூலம் புறப்பட்டுள்ளனர், மற்றவர்கள் அந்த நாடுகளை தரைவழியாக விட்டு வெளியேறியுள்ளனர். சீனா ஈரானில்…

Read More

ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தை மூடுவதற்கு நடவடிக்கை

ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பெரிய போர் ஏற்படும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என்று அரசாங்கம் கூறியது. ஈரானில் உள்ள ஆஸ்திரேலிய தூதர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். ஈரானில் உள்ள மற்ற ஆஸ்திரேலியர்கள் வெளியேற உதவுவதற்காக பல வெளிநாட்டு அதிகாரிகள் அஜர்பைஜானுடன் ஈரானிய எல்லையில் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார். தூதரகம்…

Read More

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்குக்கூட தயார் இல்லை – ஈரான்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தற்போது போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இல்லை என்று ஈரான் மத்தியஸ்தர்களான கட்டார் மற்றும் ஓமானிடம் ஈரான் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் புதிய தாக்குதல்களைத் தொடங்கி, பரந்த மோதல் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ள நிலையில், தகவல் தொடர்புகள் குறித்து அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இஸ்ரேலின் முன்கூட்டியே தாக்குதல்களுக்கு ஈரான் தனது பதில் தாக்குதலை முடித்த பின்னரே தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம் என மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தனர். “தாக்குதலுக்கு உள்ளாகும்போது…

Read More

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி வழங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது….

Read More

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. “தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான…

Read More

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எம்பரர் பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பென்குயின்களில் மிகவும் உயரமானது எம்பரர் பென்குயின் எனப்படுகிறது. இது, 4 அடி உயரம் வரை இருக்கும். கடந்த 2009 முதல் இங்கு உள்ள பென்குயின்களின் 16 காலனிகளை பிரிட்டிஷ் அன்டார்டிகா ஆய்வு குழு, செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்து வருகிறது. பருவநிலை…

Read More