பாரிஸ் கால்பந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவரம் – நூற்றுக் கணக்கானோர் காயம்

பிரான்சில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி வெற்றி கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் PSG கால்பந்து கிளப் அணி, இன்டர் மிலனை தோற்கடித்தது. ஆயிரக்கணக்கான PSG ரசிகர்கள், தலைநகர் பாரிஸின் தெருக்களில் இறங்கி பெரிய அளவிலான கொண்டாட்டங்களைத் தொடங்கினர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர் அணிகளின் ரசிகர்களுக்கும் PSG ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் வெடித்தன. இது கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பேர்…

Read More

நைஜீரியா: பேருந்து விபத்தில் 21 தடகள வீரர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் தேசிய விளையாட்டு விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தடகள வீரர்கள் ஒரு பஸ்சில் கானோ நகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்கியது. இதில் 21 தடகள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து டிரைவரின் சோர்வு அல்லது அதிக வேகத்தின் காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நைஜீரியாவின் மோசமான சாலைகளினாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமலும் வேகமாக…

Read More

ரஷ்யாவில் இடிந்து விழுந்த பாலம் : 07 பேர் பலி

ரஷ்யா முழுவதும் தனித்தனி சம்பவங்களில் பாலங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரையன்ஸ்க் பகுதியில் ஒரு நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். மற்றும் 69 பேர் காயமடைந்தனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதேநேரம் இது குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து…

Read More

இந்தியாவின் கொட்டி தீர்த்த அடைமழை : இருபத்திற்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் சனிக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ வெள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. சீனாவின் எல்லையை ஒட்டிய அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். மாநிலத்தில்…

Read More

ராஜஸ்தானில் 9 பேருக்கு கொரனோ பாதிப்பு

தெற்காசியாவில் கொரனோ தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை உட்பட 9 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்….

Read More

விளம்பரங்களால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

சமூக ஊடக விளம்பரம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து பார்க்கும் விளம்பரங்களால் பல சிறுவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இசபெல் ஹேன்சன் நடத்திய ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில், 13-17 வயதுடையவர்கள் சமூக ஊடகங்களில் ஒரு மணி நேரத்திற்கு 17 விளம்பரங்களைப்…

Read More

சீனாவில் மணப்பெண் தட்டுப்பாடு – ஏக்கத்தில் 30 இலட்சம் இளைஞர்கள்

சீனாவில் சுமார் 30 இலட்சம் இளைஞர்களுக்கு மணப்பெண் தட்டுப்பாடு என்ற சூழல் நிலவி வரும் நிலையில்,பங்களாதேஷில் இருந்து மணப்பெண்களைக் கடத்தி சட்டவிரோதமாக திருமணம் செய்ய சீன மணமகன்கள் முன்வருகின்றனர். தரகர்கள், ஒன்லைன் விளம்பரங்கள் மூலம் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இதனால் பங்களாதேஷில் உள்ள சீன இளைஞர்கள் யாரும் வெளிநாட்டு பெண்களை மணக்க வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

வெற்றிகரமாக நடந்து முடிந்த மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்றன. அதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மனித இயந்திரங்கள் பார்ப்போரை வியக்கச் செய்யும் அளவுக்குகுத்துச் சண்டையில் ஈடுபட்டன. இறுதியில் “AI Strategist” என்கிற இயந்திரமே வெற்றிபெற்றது. CMG உலக இயந்திரப் போட்டியின் ஓர் அங்கமாக அந்தக் குத்துச் சண்டை போட்டி நடந்ததாக CGTN தெரிவித்தது….

Read More

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கனடா சென்ற அவருக்கு, தலைநகர் ஒட்டாவாவில் அந்த நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கனடா நாட்டின் புகழ்பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர் கிறிஸ் பிலிப்ஸை மன்னர் சார்லஸ் சந்தித்தார். தொடர்ந்து லேண்ட்ஸ் டவுன் பூங்காவில் உள்ளூர் வியாபாரிகளை மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்….

Read More

அமெரிக்க நாட்டவருக்கு 2,500 டொலர் இழப்பீடு பெற உதவிய ChatGPT

சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட அமெரிக்க நாட்டவருக்கு இழப்பீட்டை எவ்வாறு வெற்றிகரமாகப் பெறுவது என ChatGPT உதவியுள்ளது. கொலம்பியாவுக்குப் பயணம் செய்வதனை நிறுத்திய அமெரிக்கரின் 2,500 டொலருக்கும் அதிகமான தொகையை மீட்டெடுக்க ChatGPT உதவியுள்ளது. கொலம்பியாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்ட நபர் அவருடைய விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. குறித்த நபரால் விமான நுழைவுச்சீட்டுக்கும் ஹோட்டலுக்கும் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. எவ்வாறு பணத்தைத் திரும்பிப் பெற முடியும் என்று திண்டாடிய அவர் ChatGPT உதவியுள்ளது. ChatGPT…

Read More