நாடு முழுவதையும் சேர்ந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் தேசிய கடன் உத்தரவாதமளிப்பு நிறுவனத்தின் முன்னோடியான நடவடிக்கை அமைந்துள்ளது
இலங்கையின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) ஈடுபட்டுள்ளது. தேசிய கடன் உத்தரவாதமளிப்பு நிறுவனத்தின் (NCGI) உத்தரவாமளிப்புத் திட்டத்தின் கீழான முதலாவது கடன் பகிர்ந்தளிப்பை CDB முன்னெடுத்துள்ளது. வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி டபிள்யு எம் ஜி பிரசன்னவுக்கு வழங்கப்பட்ட இந்த முதலாவது கடன் ஊடாக, அவரின் பண்ணைச் செயற்பாடுகளை ஸ்மார்ட் விவசாய செயற்பாடுகளாக தரமுயர்த்திக் கொள்வதற்கு ஆதரவளிக்கும். பத்து வருட கால பண்ணை அனுபவத்தைக் கொண்ட பிரசன்ன, குறுகிய கால பயிர்களை அதிக விளைச்சலுடன் மேற்கொள்வதற்காக உள்வைக்கப்பட்ட நீர்ப்பாசனக் கட்டமைப்புடன், polytunnel (பசுமைக்குடில்) ஒன்றை நிர்மாணிப்பார். அதனூடாக, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கப்படுவதுடன், காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சவால்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
இந்தப் பகிர்ந்தளிப்புடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை CDB வெளிப்படுத்துவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு இது தூண்டுகோலாகவும் அமைந்திருக்கும். அடுத்த மூன்றாண்டு காலப்பகுதியில் NCGI திட்டத்தினூடாக மேலும் கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், உற்பத்தித்துறை, புதுப்பிக்கத்தக்க வலு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் (ICT), விவசாயம், கடற்றொழில், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி போன்ற பிரதான துறைகளில் கவனம் செலுத்தப்படும். துறைசார் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரிகள் CDB இனால் உள்வாங்கப்பட்டு, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளருக்கான கடன் வழங்கல் செயற்பாட்டை வலிமைப்படுத்தவும், தொழில்முயற்சியாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதித் தீர்வுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய கடன் உத்தரவாதமளிப்பு நிறுவனம் (NCGI) என்பது, இலங்கை அரசாங்கம் மற்றும் 13 நிதி வசதிகளை வழங்கும்நிறுவனங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட பொது தனியார் பங்காண்மையாக (PPP) அமைந்திருப்பதுடன், அதில் CDB அங்கம் வகிக்கின்றது. இந்த PPP இன் இலக்கு என்பது, நாட்டின் நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (MSME) துறைக்கு ஆதரவளிப்பதாகும். சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் கடன் வசதிகளை அணுகுவதில் எதிர்கொள்ளும் தடைகளை, விசேடமாக போதியளவு பிணைகளை வழங்க முடியாத நிலையில் காணப்படும் நிறுவனங்களின் சிக்கல்களை இல்லாமல் செய்வது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக NCGI திட்டம் நிறுவப்பட்டுள்ளது. பகுதியளவு கடன் உத்தரவாதமளிப்புகளினூடாக, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளக்கூடிய இடர்களை குறைப்பதற்கும், பெருமளவில் நிதிச் சேவைகள் வழங்கப்படாத வியாபாரங்களுக்கும் துறைகளுக்கும் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுக்க ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தினூடாக கவனம் செலுத்தப்படுகின்றது.
தொழில்முயற்சியாண்மையை ஊக்குவித்தல், நிதிசார் உள்ளடக்கத்தை மேம்படுத்தல் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு இயங்கக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுடன் இந்த உத்தரவாதமளிப்புத் திட்டம் இணைந்துள்ளது. வியாபாரங்களுக்கு வலுவூட்டல் மற்றும் பிரயோக, தீர்வு-அடிப்படையிலான வழிமுறைகள் போன்றவற்றினூடகா பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் அதன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் பகிர்ந்தளிப்பினூடாக சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து வலுவூட்டலுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்பில் CDB இன் முகாமைத்துவ பணிப்பாளர் மஹேஷ் நானயக்கார குறிப்பிடுகையில், “இந்தத் தேசிய திட்டத்தினூடாக முதலாவது நிதிவசதியளிப்பை மேற்கொண்டிருந்ததனூடாக, தொழில்முயற்சியாளர்களுக்கு நிலைபேறான வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதற்கு அவசியமான வளங்களை மாத்திரம் வழங்காமல், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த முடிந்துள்ளது.” என்றார்.
இந்த நிதி வசதியளிப்பை பெற்றுக் கொண்ட டபிள்யு எம் ஜி பிரசன்ன பத்து வருட கால பண்ணைச் செய்கை அனுபவத்தை கொண்டுள்ளதுடன், அதனூடாக அவரின் விவசாய பிரிவை மேம்படுத்துவதற்கு அவசியமான அறிவைப் பெற்றுள்ளார். பாரம்பரிய பண்ணைச் செய்கை கொள்கையிலிருந்து அப்பால் செல்லும் வாழ்நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த நிதிவசதி ஆதரவளிப்பதாக அமைந்திருக்கும் என கருதுகிறார். “எனது விவசாய செயற்பாடுகளை நவீன மயப்படுத்துவதற்கான வாய்ப்பு இப்போது எனக்குக் கிடைத்துள்ளதுடன், எனது வியாபார செயற்பாடுகளை விரிவாக்கம் செய்து கொள்ளவும் முடியும். எமது ஆற்றலில் நம்பிக்கை கொண்டு எமக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக CDB மற்றும் NCGI க்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என பிரசன்ன தெரிவித்தார்.
நானயக்கார மேலும் தெரிவிக்கையில், “NCGI உடனான எமது பங்காண்மை என்பது, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதிச் சேவைகளை அணுகச் செய்வதற்கான நீண்ட கால அர்ப்பணிப்பாகும். இந்த வியாபாரங்கள் விரிவாக்கமடைந்து, சிறப்பாக இயங்குவதற்கு உதவி, அதனூடாக வலிமையான மற்றும் மீட்சியுடனான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்க நாம் எம்மை தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.
CDB பற்றி:
இலங்கையில் இயங்கும் வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் வரிசையில் முதல் நான்கு ஸ்தானங்களில் ஒன்றாக காணப்படும் நிறுவனமாக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) திகழ்கின்றது. நிதிச்சேவைகளில் புத்தாக்கம், நிலைபேறாண்மைக்கான உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகை பின்பற்றல் போன்றவற்றுக்காக கௌரவிப்புகளைப் பெற்றுள்ளது. டிஜிட்டல் நிலைமாற்ற செயற்பாடுகளில் CDB கவனம் செலுத்தும் நிலையில், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் பொருந்தும் நவீன தீர்வுகளினூடாக நிதிச்சேவைகள் கட்டமைப்பை தொடர்ந்தும் மீளமைத்து வருகின்றது.
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை…
Accelerating Sri Lanka’s digital future, Disrupt Asia 2025, South Asia’s premier startup conference and innovation…
Alumex வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நம்பகத்தன்மை, வேகமான விநியோகம் Hayleys Group நிறுவனத்தின் உறுப்பினரான, நாட்டின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளராக திகழும்…
சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் விளையாட்டு, இசை மற்றும் கேளிக்கைக்காக ஒன்றுசெரும் உன்னத…
Seylan Bank recently strengthened its efforts to support the nation’s small and medium enterprises (SME)…
இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான "நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை…