உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
IPL தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.