டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெப்ரவரி 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 494,000 ரூபாவை சிலாபத்திலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளை கோரியதன் ஊடாக இலஞ்ச ஊழல் தடைச்சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பியங்கர ஜயரத்னவை தலா 5 இலட்சம் ரூபா…