ஜப்பானை உலுக்கிய நில அதிர்வு

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்த உலக நாடுகள்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை பல வெளிநாட்டு நாடுகள் கண்டித்துள்ளன. சில நாட்டுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், மற்றவர்கள் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கியூபா, சிலி, வெனிசுலா, கொலம்பியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்துள்ளன. தாக்குதலைக் கண்டித்து, அமெரிக்க அதிபர் மத்திய கிழக்கில் மோதலை ஆபத்தான முறையில் அதிகரிக்க முயன்றதாகவும், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதைக் கண்டிப்பதாகவும் இந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன….

Read More

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை!

இலங்கை நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சமீபத்தில் உயர்த்தப்பட்ட உணவு விலைகளை திருத்தியமைக்க நாடாளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஜூன் 1, 2025 முதல் நிர்வாக தர அதிகாரிக்கு மாதம் ரூ. 4,000 மற்றும் நிர்வாகமற்ற ஊழியர் உறுப்பினருக்கு மாதம் ரூ. 2,500 வசூலிக்க நாடாளுமன்ற அவைக் குழு முன்னதாக முடிவு செய்திருந்தது. இருப்பினும், நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்ட பிறகு, ஜூலை 1 முதல்…

Read More

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

ஈரானின் அணு மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் பல ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா கூறுகிறார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நாள் முழுவதும் நிலைமை உருவாகக்கூடும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளதாகக் கூறினார். அதன்படி, இந்த சூழ்நிலையில் சாத்தியமான தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலில் வசிக்கும்…

Read More

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வருகை

ஆபரேஷன் சிந்து மூலமாக ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.நேற்றிரவு 310 பயணிகளை அழைத்துக் கொண்டுசிறப்பு விமானம் டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்தது. நள்ளிரவில் மேலும் 290 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் டெல்லிக்கு வந்துள்ளது. ஈரானில் இருந்து இதுவரை 1,117 பேர் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்களுடன் நேபாளம், இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்தியாவால் மீட்கப்பட்டுள்ளனர். இதன் பொருட்டு நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன

Read More

டிஜிட்டல் கற்றலை அறிமுகப்படுத்த தீர்மானம்

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார். உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார். உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து…

Read More

யாழில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவாந்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும் இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Read More

அமெரிக்காவின் அதிரடி நகர்வு – பாதுகாப்பை அதிகரித்த இஸ்ரேல் – பாதிக்கப்பட்ட ஈரான் அணுசக்தி நிலையங்கள்.

ஈரான் – இஸ்ரேல் மோதலை கண்டித்து பேசிவந்த அமெரிக்காவின் அழைப்புகளை ஈரான் தொடர்ந்து நிராகரித்ததோடு, அமெரிக்காவிற்கு சவால் விட்டதை தொடர்ந்து , அமெரிக்க ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தகர்த்துள்ளது. போர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் உள்ளிட்ட ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம் என அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் “அனைத்து விமானங்களும் இப்போது ஈரானின் வான்வெளிக்கு வெளியே பாதுகாப்பாக திரும்பி உள்ளன. முதன்மை தளமான…

Read More

ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.

யாழ். ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாத ஐயா என்றழைக்கப்படும் சந்திரன் ஐயா என்பவரே நேற்றையதினம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ஆம் திகதி அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார், எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்….

Read More

ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தை இஸ்ரேல் தாக்கிய காணொளி ஆதாரம்.

இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படையால் இஸ்ஃபஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி தளம் தீடீர் என தாக்கப்பட்டது. இந்த தாக்குதல் “ஓபரேசன் ரைசிங் லயன்” (Operation Rising Lion) என்ற பெயரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த தாக்குதலில் இஸ்ஃபஹானில் உள்ள யுரேனியம் மாற்று வசதி (Uranium Conversion Facility)…

Read More