ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய தொடர்ந்தும் உரையாற்றுகையில், தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள…

Read More

ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து மட்டக்களப்பு கொட்டுவடம், திருகோணமலை சல்லிக்கோவில், ஏறக்கண்டி, எலிபன்ட் அய்லேண்ட், நந்திக்கடல், கல்லடி, பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்த 36 நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் காஷியப்ப, கோட்டாபய, விஜயபா மற்றும் உத்தர ஆகிய…

Read More

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.  தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள்,…

Read More

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 3.65 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 144.96 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த…

Read More

சிங்கப்பூரில் மீண்டும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. LF.7 மற்றும் NB.1.8 எனப்படும் கொவிட்-19 திரிபுகள் அதிகளவில் பரவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளைப் பயன்படுத்துமாறும், விசேட பூஸ்டர் ஊசிகளைப்…

Read More

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள்…

Read More

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.  தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.  35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும்…

Read More

நாட்டில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும், சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில…

Read More

கட்டுநாயக்கவில் பிரபல தொழிற்சாலை மூடப்பட்டது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த பணியார்கள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More