இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17…

Read More

கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை- காரணம் வௌியானது

கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின் கணவன் மற்றும் மருமகன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண் கூர்மையான ஆயுதங்களால் அடித்துக் கொல்லப்பட்டு, அவரது சடலம் அருகில் உள்ள கால்வாயில் கொண்டுச்சென்று வீசப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. 65 வயதான குறித்த பெண், ஆணொருவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளதாகவும், சம்பவத்தன்று அந்நபருடன்…

Read More

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல்…

Read More

போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி – ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் விருப்பத்தின் பேரில் அவரது உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை…

Read More

ஈரான் வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது. இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர…

Read More

எல்லையை கடக்க முயன்ற 54 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 54 “பயங்கரவாதிகளை” சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் அருகே நடந்தது. அங்கு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் எல்லைக்குள் நேற்று இரவு ஊடுருவினர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 54 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்…

Read More

Orient Finance Supports Sri Lanka’s Three-Wheel Drivers with New Tuk Leasing Plan

Three-wheelers, or tuk-tuks, are a vital part of Sri Lanka’s transport landscape, providing millions with affordable and efficient mobility each day. Behind the wheel of each tuk-tuk is a dedicated driver—someone who works tirelessly to support their family, often under challenging financial circumstances. As the nation continues to navigate economic difficulties, these drivers are under…

Read More

மதம் கடந்த நல்லிணக்கம்.

Pope Francis அவர்களினது மறைவால் துயரடைந்துள்ள அன்புள்ளங்களுக்கு இந்து குருமார் அமைப்பு சார்பாக தலைவர் சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள்.ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Read More

ஈரானில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் – 14 பேர் உயிரிழப்பு!

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று (26) ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, 750 பேர் காயமடைந்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் தொகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தீப்பரவல் காரணமாக, குறித்த பகுதியில் உள்ள…

Read More

பஹல்காம் தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை….

Read More