தினக்குரல் பத்திரிக்கையின் ஸ்தாபகர் காலமானார்.

‘தினக்குரல்’ பத்திரிகையின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான எஸ்.பி. சாமி வயது மூப்பு காரணமாக தனது 89 ஆவது வயதில் நேற்று காலமானார். வயது மூப்பின் காரணமாக எஸ்.பி. சாமி நேற்று (வெப்ரவரி 19) இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.

Read More

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சந்தேகநபர் இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று(வெப்ரவரி 19) காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி மொஹமட் அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் அடையாளம் காணப்பட்டு புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணிக்கும்போது விசேட அதிரடிப்படையினரால்(STF) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர்…

Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பற்றி பெப்ரல் அமைப்பு விளக்கம்

வெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற ஊடகவியலாளர்கள் சந்திந்தப்பின் போது உள்ளுராட்சிமன்ற அதிகாரசபை தேர்தல் பற்றிய ரோஹண ஹெட்டியாராச்சி வழங்கினார். உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளின் சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றில் இருந்து 52 – 66 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மேலும் அவ்வாறு சட்டமூலம் அடங்கிய வர்த்தமானி வெயிடப்பட்ட பின் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துவிடும். அதன் பின்…

Read More

CDB இனால் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் முதலாவது தேசிய கடன் உத்தரவாதமளிப்பு நிறுவனத்தின் கடன் பகிர்ந்தளிப்பு முன்னெடுப்பு.

நாடு முழுவதையும் சேர்ந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் தேசிய கடன் உத்தரவாதமளிப்பு நிறுவனத்தின் முன்னோடியான நடவடிக்கை அமைந்துள்ளது இலங்கையின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையில் சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) ஈடுபட்டுள்ளது. தேசிய கடன் உத்தரவாதமளிப்பு நிறுவனத்தின் (NCGI) உத்தரவாமளிப்புத் திட்டத்தின் கீழான முதலாவது கடன் பகிர்ந்தளிப்பை CDB முன்னெடுத்துள்ளது. வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி டபிள்யு எம் ஜி பிரசன்னவுக்கு வழங்கப்பட்ட இந்த முதலாவது கடன் ஊடாக,…

Read More

மார்பில் குழந்தையோடு மிடுக்காக தொழில் புரியும் தாய்…

டெல்லி ரயில் நிலையத்தில் தனது குழந்தைக்கான அரவணைப்பை வழங்கியபடி நேர்த்தியாக தனதுதொழிலையும் செய்யும் பெண் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை(RPSF) காவலரது காணொளி சமூகவலைத்தளத்தில் பெரும் பெற்றுள்ளது. அவருடைய பெயர் ரீனா RPSF இன் அதிகாரப்பூர்வ X கணக்கிலேயே இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.பெண் காவலரான ரீனா ஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் கையில் தடியுடன் கடைமையாற்றும் போது அவரது ஒரு வயது நிரம்பிய குழந்தையை நெஞ்சில் சுமந்தபடி அமைந்த அந்தக்காணொளி தாயின் அன்பை மற்றுமோர் தளத்தில் அமரவைத்துள்ளது.

Read More

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலதிக தகவல்கள்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான கணேமுல்ல சஞ்சீவ இன்று (வெப்ரவரி 19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, சந்தேக நபர் குற்றவியல் நடைமுறைச் சட்டடிப்புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்துவைப்பதற்கு ஏற்றவாறு பக்கங்களை வெட்டி நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்துவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்தினுள் பிரவேசிக்கும் CCTV காட்சிகள் சமூகவலைத்தளத்தில் உலவருகின்றன.

Read More

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் பலி.

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலில் தம்புத்தேகம மற்றும் செனரத்க்காம ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் மோதுண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(வெப்ரவரி 19) காலை இந்த இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்துள்ளனர். 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஆர்ஜெண்டினாவில் அரசியல் பதற்றம்.

ஆர்ஜென்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானனத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆர்ஜெண்டீனா ஜனாதிபதியின் அண்மைக்கால செயற்பாடுகள் முதலீட்டாளர்களை பாதிப்பதாக கூறப்படுவதோடு அந்த நட்டு சட்டத்தரணிகள் பலர் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே இந்த ஊழலில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லேன்னுத்துடன் செயற்பட்டதாகவும் ஆர்ஜென்டினா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More

இன்றைய தங்கவிலை நிலவரம் – சற்றே உயர்வு.

24கரட் தங்கம் – 233,000 ரூபா 22கரட் தங்கம் – 214,000ரூபா 18கரட் தங்கம் – 175,000 ரூபாவாக காணப்படுகின்றது. இதன்படி, 24கரட் தங்கம் – 29,125 ரூபா 22கரட் தங்கம் – 26,750 ரூபா 18கரட் தங்கம் – 21,875 ரூபாவாக விற்பனையாகின்றது.

Read More

கனேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிப்பிரயோகம்.

புத்துக்கடையில் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் உடையில் மாறுவேடமிட்ட வந்த துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். துப்பாக்கிதாரி சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் நீதிமன்றத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளது. மேலும் தாக்குதலுக்குப் பின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச்சென்றுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குவிசாரணைக்காக சஞ்சீவ…

Read More