புத்தளம் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் நகர் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கும், தெரிந்தவர்கள் இல்லத்துக்குமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளார்கள். அவசர கால நிலைத்தொடர்பில் உதவிகளை பெற்றுக்கொள்ள 117 என்கின்ற எண்ணுக்கு அழைப்பை மேற்க்கொள்ளுங்கள். காணொளி பதிவு – கிருஷான் யோகராசா

Read More

இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையில் 27.11.2025 காலை 8.30மணியில் இருந்து 28.11.2025 காலை 8.30மணிவரைக்குமான காலப்பகுதியில் இலங்கையில் வரலாறு காணாத மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தத.

நேற்றிரவு பெய்த கடுமையான மழைக்காரணமாக ஹாலியெல டிக்வெல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாடசாலைக்கு அருகாமையில் இருந்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த அனைவரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர். இவர்களை தேடும் பணி இடம்பெற்று வரும் நிலையில் தற்போது ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புகைப்படம் – Ganeshan Mahadevan

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முகமது!

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் முடிவின்படியும், கட்சித் தலைமைக்கு துரோகம் இழைக்காமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்மாயில் முத்து முகமது, தேசியப் பட்டியல் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிவாரணங்களை வழங்குவதற்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக நிதி தேவைப்பட்டால் அறிவிக்குமாறு ஜனாதிபதி அநுர அறிவித்துள்ளார்.  அரச நிர்வாக மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரின் செயலாளர் ஊடாக இந்த தகவலை ஜனாதிபதி, சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி இன்றைய தினம் காலை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர்…

Read More

வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல் பிற்பகலில் வேகம் அதிகரிக்கும்!

டிட்வா புயல் தற்போது வாழைச்சேனைக்கும் பொலன்னறுவைக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும் வானிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மாலை வரை மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலானது தற்போது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்கின்றது. நேற்றைய தினம்(27) டிட்வா புயலின் மையச்சுழற்சி மணிக்கு…

Read More

CMTA launches ‘Buy Brand-new’ campaign to protect Sri Lankan car buyers

Ceylon Motor Traders Association (CMTA), the voice of the automotive industry body affiliated to the Ceylon Chamber of Commerce, has initiated a national awareness campaign on the increasing risks of acquiring vehicles through various importers and the benefits of purchasing them through CMTA – authorised agents. With many indirect imports continually rising into the Sri…

Read More

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர குமார தெரிவித்தார். நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக மாணிக்க கங்கையின் நீர்மட்டம் பெருக்கெடுக்கும் நிலையை அடைந்துள்ளதால், கதிர்காமத்திற்கு வரும் பக்தர்கள் அவதானத்துடன் இருக்குமாறு மொனராகலை…

Read More

உரமானிய விலை தொடர்பில் வெளியான தீர்மானம்

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.  நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறைப்படியான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கே.டி. லால்காந்த, நெல் பயிர்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக அவதானம் செலுத்தி, நெல் விவசாயியைப் பாதுகாப்பதற்குத்…

Read More