இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
பாரம்பரியம்மற்றும்நிலைத்தன்மையுடன்முன்னேறும் Dunsinane Estate
கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் பழையான தோட்டங்களில் ஒன்றான Dunsinane Estate ஒரு தனித்துவமான நிலையைப் பெற்றுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த எஸ்டேட் 1879ஆம் ஆண்டு போன்ற தொன்மையான காலத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தோட்டத்தின் மொத்த பரப்பளவு 790 ஹெக்டேயராக இருந்தாலும், அதில் 494 ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலை செய்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, இந்த எஸ்டேட்டின் நிர்வாகம் Aitken Spence பெருந்தோட்ட குழுமத்தின் கீழ் உள்ள எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பெனியால் நிர்வகிக்கப்படுகிறது….
