கொட்டாவ நகரின் அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் செயற்பாடுகளுக்கு மத்தியில், Prime Lands தனது புதிய அபிவிருத்தித் திட்டமான ‘Skye Blossom Kottawa’ இன் நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை அண்மையில் முன்னெடுத்தது. “உங்களுடன் வளர்ச்சியடையும் இல்லம்” (‘A Home that grows with you.’) எனும் கோட்பாட்டுக்கமைய நிர்மாணிக்கப்படும் இந்த இல்லத் தொகுதி, கொட்டாவ பகுதியில் நவீன வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும்.
அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டதுடன், அத்துடன் Skye Blossom இன் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின. கொட்டாவ நகரின் தோற்றக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், பிரத்தியேகமான வாழிட அனுபவத்தை பின்பற்றியும் இந்த நிர்மாணத் திட்டம் அமைந்திருக்கும் என்பதுடன், விறுவிறுப்பான மற்றும் பிரத்தியேகமான சமூகத்துக்கு புதிய நியமங்களை ஏற்படுத்தி சிறந்த வாழ்க்கை பயணத்தை முன்னெடுக்க வழிகோலுவதாகவும் அமைந்திருக்கும்.
இந்த வைபவத்தில் Prime Group இன் தவிசாளர் மற்றும் இணை தலைமை அதிகாரி ஆகியோருடன் விசேட விருந்தினர்கள் மற்றும் பெருமைக்குரிய எதிர்கால உரிமையாளர்கள் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். உறுதியான அடித்தளத்துடன், Skye Blossom இன் நிர்மாணப் பணிகள் உயர் தர நியமங்கள் மற்றும் தங்கியிருக்கும் திறன் ஆகியவற்றை உறுதி செய்து முன்னெடுக்கப்படும்.
Prime Lands (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “Skye Blossom இன் அடிக்கல் நாட்டலுடன், இலங்கையின் நவீன நகர வாழிட அனுபவத்தின் எதிர்காலத்தை நாம் அறிமுகம் செய்கிறோம். இல்லம், உங்களுடன் வளர்ச்சியடைய வேண்டும் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் Skye Blossom அமைந்திருக்கும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பின்பற்றும் வகையில் அமைந்திருக்கும். Prime Lands இன் புத்தாக்கமான கொடுப்பனவு தீர்வுகள் மற்றும் நெகிழ்ச்சியான உரிமையாண்மை தெரிவுகள் போன்றன தரமான வாழ்க்கையை அணுகுவதை இலகுவாக்கியுள்ளது. தமது வசிப்போருடன் மேம்படும் இல்லங்களை உருவாக்குவதற்கான எமது உறுதியான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது.” என்றார்.
கொட்டாவ நகரின் மையப்பகுதியில் இரண்டு 16 அடுக்கு டவர்களில் நிர்மாணிக்கப்படுவதுடன், பசுமையான, இயற்கை அம்சங்கள் நிறைந்த பெல்கனிகளையும் கொண்டிருக்கும். நீண்ட கால அடிப்படையில் பெறுமதி அதிகரிக்கும் வகையில் Skye Blossom வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 975 sqft – 1375sqft வரையான அளவுகளில் 2 மற்றும் 3 படுக்கையறை அலகுகளை கொண்ட ஒப்பற்ற வசிப்பிட அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும். இல்லங்களுக்கிடையே பாரம்பரியமாக காணப்படும் வரையறைகளை மாற்றியமைத்து, நீடித்து நிலைத்திருக்கும் தொலைநோக்குடனான அம்சங்களைக் கொண்ட Prime Lands இன் நோக்கத்தின் வெளிப்பாடாக Skye Blossom அமைந்திருக்கும். நகர வாழ்க்கைக்கு பொருத்தமான வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுவதுடன், புதுமையான கட்டடக் கலை அம்சங்களுடன், அமைதியான இயற்கை அம்சங்களையும் கலந்ததாக அமைந்து, நவீன இலங்கையர்களின் மாற்றமடைந்து வரும் வாழ்க்கை முறைக்கு பொருத்தமான வகையிலும், தற்கால செங்குத்தான வசிப்பிடப் பகுதி அனுபவத்தில் புதுவித மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.
வதிவோரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய உள்ளம்சங்களைக் கொண்டதாக கவனமான முறையில் Skye Blossom இன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் 100 அடி நீளமான நீச்சல் தடாகம் மற்றும் சிறுவர்களுக்கு விசேடமான நீச்சல் தடாகம், ஒவ்வொரு அலகுக்கும் மின்சார வசதியுடனான பிரத்தியேக பன்-நோக்கு அறைகள் மற்றும் உடற் தகைமையை பேணுவதற்காக உயர்தர fitness அனுபவத்தை வழங்கும் plush gymnasium ஆகியனவும் அடங்கியிருக்கும். தொலைநோக்குடன் திட்டமிடப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளில், போதியளவு வாகன தரிப்பிட இடவசதி வதிவோருக்கும், விருந்தினர்களுக்கும் வழங்கப்படுவதுடன், Skye Blossom home என அனைவரும் அழைக்கும் பகுதிக்கான சௌகரியமான அணுகலை வழங்கும்.
கொட்டாவ பகுதியின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, வளர்ந்து வரும் வணிக உட்கட்டமைப்பு மற்றும் குடும்பத்துக்கு நட்பான சூழல் போன்ற அம்சங்களை உள்வாங்கி மூலோபாய ரீதியில் Skye Blossom அமைந்துள்ளதுடன், கொழும்பின் வணிகப் பகுதிகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளை இலகுவாக சென்றடையக்கூடிய வசதியையும் வழங்குகிறது. மஹாரகம நகரம், தர்மபால கல்லூரி மற்றும் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறல் ஆகியவற்றுக்கு அண்மையில் Skye Blossom அமைந்துள்ளது.
முதன் முறை கொள்வனவு செய்பவராக இருந்தாலும் அல்லது அனுபவம் வாய்ந்த முதலீட்டாளராக இருந்தாலும், Skye Blossom இனால் வதிவோருடன் பொருந்தும் வீடொன்றின் உரிமையாளராவதற்கு அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு தொடர்புகளுக்கு 0716 686 686 அல்லது பார்வையிடவும் www.primelands.lk
இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…
Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…
Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…
Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…
1st October 2025, Colombo: SOS Children’s Villages Sri Lanka marked World Children’s Day with the…