First Capital Holdings PLC யின் துணை நிறுவனமான First Capital Advisory Services (Pvt) Ltd, Scale Up 2025 தேசிய சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் அமர்வின் உத்தியோகபூர்வ ஆலோசனை பங்காளராக பெருமையுடன் இணைந்திருந்தது. இந்நிகழ்வை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், First Capital தனது புதிய துணை நிறுவனமான First Capital Advisory Services நிறுவனத்தை அறிமுகம் செய்திருந்தது. மூலதன சந்தைகள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க ஆலோசனை தீர்வுகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலினூடாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் நோக்குடன் இந்நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் தமது வளர்ச்சிப் பயணத்தின் போது எதிர்கொள்ளும் சவால்களை First Capital Advisory Services அறிந்து, சந்தை தோற்றப்பாட்டை மேம்படுத்தல், ஆளுகை கட்டமைப்பை வலிமைப்படுத்தல் மற்றும் வியாபார பெறுமதியை மேம்படுத்தல் போன்றவற்றுக்காக இந்த வியாபாரங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. பொதுவில் சுலமாக அணுக முடியாத, பொதுப் பட்டியலிடல் மற்றும் நீண்ட கால பங்காண்மைகள் போன்ற மூலோபாய நிதியளிப்பு தெரிவுகளில் கவனம் செலுத்துவதற்கு வியாபாரங்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையுடன் இணைந்து குழுநிலை கலந்துரையாடலில் First Capital Advisory Services (Pvt) Ltd ஈடுபட்டது. இதில் First Capital Advisory Services (Pvt) Ltd பிரதம நிறைவேற்று அதிகாரி தருஷ ஏக்கநாயக்க மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, First Capital Advisory Services (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி தருஷ ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் பெருமளவு ஆற்றல்களைக் கொண்டுள்ள போதிலும், ஆலோசனை நிபுணத்துவம் மற்றும் நிலைபேறாண்மையை ஊக்குவிப்பதற்கான சந்தை அறிந்திருப்பை கொண்டிருப்பதில்லை. இந்த இடைவெளியை இல்லாமல் செய்யும் வகையில் First Capital Advisory Services நிறுவப்பட்டுள்ளது. ஆளுகையை வலிமைப்படுத்துவது, மூலோபாய மூலதன தீர்வுகளை கட்டமைப்பது மற்றும் பொதுப் பட்டியலிடல்கள் மற்றும் தனியார் பங்காண்மைகளினூடாக வியாபாரங்களுக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்துவதற்கு தயார்ப்படுத்தல் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவோம்.” என்றார்.
இலங்கையின் மூலதன சந்தைகளில் உறுதியான நிலையைக் கொண்டுள்ள குழுமத்தின் பிந்திய உள்ளடக்கமாக First Capital Advisory Services அமைந்துள்ளது. குழுமத்தில், இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட முன்னணி வங்கிசாரா நிதி வர்த்தக நிறுவனம் First Capital Treasuries PLC, பெருமளவு முதலீட்டாளர்களுக்கு வெல்த் மனேஜ்மன்ட் சேவைகளை வழங்குவதுடன், தனது நிர்வகிப்பின் கீழ் ரூ. 110 பில்லியனுக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டுள்ள First Capital Asset Management (Pvt) Ltd., மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பங்குப்பரிவர்த்தனையை அணுகுவதற்கு வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களுக்கு நிபுணத்துவ சேவைகளை வழங்குவதற்காக திறமையான ஆய்வு அணிகளை கொண்ட First Capital Equities (Pvt) Ltd. போன்றன அடங்கியுள்ளன.
குழுமத்தில் First Capital Advisory services உள்ளடக்கப்பட்டுள்ளதனூடாக, இலங்கையின் வியாபாரக் கட்டமைப்பினுள் புத்தாக்கம், நிதிசார் வலுவூட்டல் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை குழுமம் மேலும் உறுதி செய்துள்ளது.
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. First Capital Holdings PLC க்கு LRA இடமிருந்து [SL] A உடன் Positive outlook தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…
Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…
Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…
Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…
1st October 2025, Colombo: SOS Children’s Villages Sri Lanka marked World Children’s Day with the…