Uber Eats, Sri Lanka’s most loved delivery app, today announced an exclusive partnership with Delmo, Sri Lanka’s leading poultry and meat producer, to bring fresh chicken and value-added meat products on-demand to consumers across the country. Launching initially with 10 outlets, the partnership will expand nationwide in the coming months, making Delmo’s range of fresh…
SLT-MOBITEL புத்தாக்கம், மீட்சி மற்றும் மக்களுக்கு முன்னுரிமை நோக்குடன் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குகிறது
இலங்கையின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனரான SLT-MOBITEL, நாட்டின் டிஜிட்டல் மாற்றச் செயற்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக புத்தாக்கம், மீட்சி மற்றும் மக்களை முன்னிலைப்படுத்தும் ஒரு தூரநோக்குடன் செயலாற்றுகிறது. 2025ஆம் நிதி ஆண்டின் வலுவான நிதிப் பெறுபேறுகளின் அடிப்படையில், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் மற்றும் தேசிய டிஜிட்டல் உள்ளடக்கத்தை முன்னெடுப்பதற்குமான முன்னோடி முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதில் SLT-MOBITEL தனது பங்களிப்பை உறுதிப்படுத்துகின்றது.
கட்டுக்கோப்பான செலவு முகாமைத்துவம், செயற்பாட்டு வினைத்திறன் மற்றும் நிலையான நிலையான மற்றும் மொபைல் தொலைபேசி வர்த்தகங்களின் வளர்ச்சி ஆகியவற்றினூடாக இலாபமீட்டலில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை எட்டப்பட்டுள்ளது. இது தேசிய உட்கட்டமைப்பு வசதிகளில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான நிறுவனத்தின் நிதி அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.
தேசிய அபிவிருத்தியின் செயற்படுத்துனராக SLT-MOBITEL இன் வெற்றி, வெளிப்படையானதாகவும், பரந்த வீச்சைக் கொண்டதுமாக அமைந்துள்ளது. அடுத்த தலைமுறைக்கான இணைப்பு அனுபவத்தை வழங்கும் வகையில், இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்ததன் ஊடாக, நாட்டின் டிஜிட்டல் நிலைமாற்றத்தை முன்னெடுப்பதிலும், இலங்கையை புத்தாக்கத்தில் உலகளாவிய ரீதியில் முன்னிலைக்குக் கொண்டு செல்வதிலும் தனது தலைமைத்துவத்தை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2026 மார்ச் மாதம், SLT-MOBITEL முன்னோடியான 24/7 தொழிற்பாட்டு மாதிரியை அறிமுகம் செய்து, தடையற்ற இணைப்பு மற்றும் துரித செயலிழப்புத் தீர்வு ஆகியவற்றை நிறுவன மற்றும் வீட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தது. தடையற்ற வலையமைப்பு உட்கட்டமைப்பைத் தங்கியிருக்கும் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் இது பெரும் நன்மைகளை வழங்கும்.
இந்தச் சேவை மாதிரியானது சந்தையில் தனித்துவமானதுடன், ஏனைய போட்டியாளர்களால் எட்ட முடியாத ஒரு புதிய தொழிற்துறை அளவுகோலை நிலைநாட்டுகின்றது. இது நம்பகத்தன்மை, சேவைச் சிறப்பு மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒரு முன்னோடி எனும் SLT-MOBITEL இன் நற்பெயரை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. கொழும்பு Metro மற்றும் கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய முக்கிய பிரதேசங்களில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள 14 வெளிக்கள பராமரிப்பு நிலையங்கள் (OPMCs), முழு நேரமும் (24/7) இயங்கும். இது நாட்டின் மிக விரிவான வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட சேவை வலையமைப்பை வெளிப்படுத்துகின்றது.
SLT-MOBITEL இன் விரிவான சாதனைகள் மற்றும் மூலோபாய இலக்குகளை பற்றி விளக்கமளிக்கும் விசேட நிகழ்வொன்றில், இந்த 24/7 சேவை மாதிரியானது நிறுவனத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக முன்வைக்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரத்ன, ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத்தின் தவிசாளர் கலாநிதி மோதிலால் டி சில்வா, பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், பிரதம செயற்பாட்டு அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் SLT-MOBITEL பிரதம நிதி அதிகாரி சஞ்சீவ சமரநாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத்தின் தவிசாளர் கலாநிதி மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது வலுவான நிதிப் பெறுபேறுகள், SLT-MOBITEL இன் மீட்சியையும் மற்றும் வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன. 24/7 எனும் 24 மணிநேரமும் செயற்படும் வெளிக்கள பராமரிப்பு நிலைய (OPMC) சேவைகளை விரிவுபடுத்துவதன் ஊடாக, சேவை நம்பகத்தன்மையில் நாம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளோம். தடையற்ற இணைப்பை வழங்குவதற்கான எமது திறனின் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்துவதுடன், தேசிய முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எமது ஆதரவை வழங்குவதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் முதுகெலும்பையும் நாம் பலப்படுத்துகின்றோம்.” என்றார்.
SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வு வழங்குனர் என்ற ரீதியில், மக்களை மையமாகக் கொண்ட முன்னெடுப்புகளினூடாகத் தேசிய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதில் எமக்கிருக்கும் முக்கிய பங்கையும் பொறுப்பையும் நாம் நன்கு உணர்ந்துள்ளோம். தொழிற்துறையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எமது 24/7 சேவை மாதிரியானது, ஒரு சாதாரண அளவுகோலுக்கும் அப்பாற்பட்டதாகும். இது எமது நிதி பலத்தையும் ஆற்றலையும் பயன்படுத்தி, டிஜிட்டல் நிலைமாற்றம், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான எமது அர்ப்பணிப்பை பறைசாற்றுகின்றது.” என்றார்.
SLT-MOBITEL நம்பகத்தன்மை, Cloud Security, Cloud Privacy, சுற்றுச் சூழல் முகாமைத்துவம், தர முகாமைத்துவம் மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சான்றிதழ்களினால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்கான தர அளவுகோலை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG), நிதி அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்காக 25 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளமை, இத்துறையில் அதன் தலைமைத்துவத்தை பறைசாற்றுகின்றது. அத்துடன், Ookla® இனால் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வழங்கப்பட்ட அங்கீகாரமானது, SLT-MOBITELஐ ‘இலங்கையின் சிறந்த மொபைல் வலையமைப்பு’ என மீண்டும் அடையாளப்படுத்தியுள்ளது. இந்த கௌரவிப்பினூடாக அனைத்து இலங்கையர்களுக்கும் உயர் தரம் வாய்ந்த இணைப்புத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மீள-உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு நேரடியாகப் பங்களிக்கும் வகையில், SLT-MOBITEL பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வலையமைப்புகளை செப்பு கம்பிகளிலிருந்து அதிவேக Fibre தொழில்நுட்பத்திற்கு தரம் உயர்த்துவதன் மூலம், முக்கியமான செயற்பாடுகளுக்கு வேகமான மற்றும் நம்பகமான இணைப்பை வழங்கியுள்ளது. அத்துடன், பாதுகாப்பான தரவு மையம் மற்றும் Hosting தீர்வுகளினூடாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு ஆதரவு வழங்குவதுடன், இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு அன்லிமிடட் அதிவேக இணைய வசதிகளை வழங்குவதன் மூலம் கல்வியில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் முன்னணி வகிக்கின்றது.
இந்த முயற்சிகளுக்கு மேலதிகமாக, SLT-MOBITEL தனது டிஜிட்டல் சேவைகளை SmartChat Mega மூலம் விரிவுபடுத்தியுள்ளது. இது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு AI மூலமான தனிப்பயனாக்கப்பட்ட வணிகத் தீர்வுகளை வழங்குவதுடன், நிறுவன வளர்ச்சியின் ஊடாக தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றது. மேலும், Ceylon Remit தீர்வானது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தமது பணத்தை எவ்வித தடையுமின்றி நாட்டிற்கு அனுப்புவதற்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாக்கம், வினைத்திறன் மற்றும் மீளெழுச்சி ஆகியவற்றின் ஊடாக, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உருமாற்றமளிக்கக்கூடிய தீர்வுகளை வழங்கும் முயற்சிகளின் மூலம் டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட இலங்கையை SLT-MOBITEL உருவாக்கி வருகின்றது. இது வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதுடன், நிறுவனங்களை மேம்படுத்தி, மேலும் உள்ளடக்கிய ஒரு தேசிய டிஜிட்டல் கட்டமைப்பை கட்டியெழுப்புகின்றது.
