இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
திருகோணமலையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று (ஏப்ரல் 04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, கைதானவர்…

