தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஆளும் கட்சி எம்.பி பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுசந்த தொடாவத்தை, அவரது மனைவிக்குச் சொந்தமான ப்ராடோ ரக சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கண்காணிப்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த வாகனம் இன்று (மார்ச் 25) பிலியந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுசந்த தொடாவத்தை வேறு பெண்களுடன் முறைகேடான உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி அவரது…

