தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிமன்றில் இன்று முன்னிலையாகிறார் தேசபந்து தென்னகோன்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் மகிழுந்தை ஓட்டிச்…

