‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவு.
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் நேற்று(மார்ச் 25) தெரிவு செய்யப்பட்டார். நேற்று (மார்ச் 25) நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் 2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர்,யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டில் சட்டமாணி பட்டத்தினைப் பெற்று, 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

