இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டிலுள்ள நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாகவே குறித்த பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன்…

