‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்துவது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல்
வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (ஏப்ரல் 03) நடைபெற்றது. வழக்கமாக வடமாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தாமல் திரும்பி அனுப்பப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் அண்மையில் இது தொடர்பான பேசுபொருள் அதிகமானதை முன்வைத்து இம்முறை தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த முனைப்புடன் இந்த கலந்துரையாடலை முன்னெடுத்திருக்கின்றார்கள். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவு…

