நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

விரைவில் இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என இந்திய ஊடகங்களில் ஒன்றான “WION” செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமரின் விஜயத்துக்கான திகதி உறுதிசெய்யப்படாத நிலையில் ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் இப்பயணம் இடம்பெறலாம் என எதிர்ப்பிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார பின்னணியில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.