தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அனுபவம் மிக்க தலைவர் விஷ் கோவிந்தசாமிக்குப் பிறகு, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் புதிய யுகத்தை நோக்கிய பொறுப்பை ஏற்கிறார் ஷியாம்.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிறைவேற்று அதிகார பதவியில் இருந்த விஷ் கோவிந்தசாமி அவர்கள் அப்பதவியிலிருந்து விலகி, பிரதித் தலைவராக நிறைவேற்று அதிகாரமில்லாத பதவியை வகிப்பதாக நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. குழுமத்தில் அவர் வகித்த சிறந்த தலைமை, புத்தாக்கமான மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் பொறுப்பான தொழில் முனைவோருக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அவரது 28 ஆண்டு வணிக வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சாதனைகளாக உள்ளன. கோவிந்தசாமி அவர்கள் தொடர்ந்து குழுமத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார். கோவிந்தசாமி அவர்களுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வாகவும்,…

