நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா விதித்துள்ள புதியசுங்கவரிகுறித்து பிரதிபலிக்கும் இலங்கைஆடைத்தொழில்துறை
அமெரிக்காவின் புதிய சுங்கக் கொள்கைக்குஇலங்கை ஆடைத் தொழிற்துறை எதிர்ப்பு அமெரிக்கா அண்மையில் அறிவித்த புதிய சுங்க வரி கொள்கை தொடர்பாக இலங்கையின் ஆடைத் தொழில்துறை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய சுங்க வரி மாற்றங்கள், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழிலை பெரிதும் பாதிக்கும் என்றும், ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் அபாயத்தில் உள்ளன என்றும் தொழில்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் 2ம் திகதி அறிவித்த 10% அடிப்படை சுங்கவரியை…

