இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சுகவீனமின்மையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது – “இன்று காலையில் நீரிழப்பு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று அதிக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய ஊடகங்களும், சமூகவலைத்தள வாசிகளும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக…

அஸ்வெசும உதவித்தொகை வங்கிகளில்.
அஸ்வெசும மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் வங்கி கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் குறித்த பணத்தைப் பெறமுடியும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நலன்புரி நன்மைகள் சபை, இலங்கை வங்கிகளுக்கு இடையேயான கொடுப்பனவு முறை(SLIPS) தொடர்பான அமைப்பின்…