நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
IML T20யில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இலங்கை.
இலங்கை பங்கேற்கும் 2025 IML T20 போட்டியின் 4வது போட்டி இன்று (மார்ச் 06) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இலங்கை விளையாடவுள்ளது. இந்தியாவின் வதோதராவில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. 2025 IML T20 புள்ளிகள் பட்டியலில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளதுடன் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் இந்திய மாஸ்டர்ஸ் அணி…

