அமெரிக்காவால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டொலர் பெறுமதியான உபகரணங்கள்.

அமெரிக்காவினால் 1 மில்லியன் டொலர் (299 மில்லியன் இலங்கை ரூபா) மதிப்புள்ள கதிர்வுச்சு இனங்காணல் உபகரணங்கள் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டன. இந்த உபகரணங்கள் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தும், ஆபத்தான இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பொருட்களைக் கண்டறியும் மற்றும் அணு மற்றும் கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More