உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

கரிம உற்பத்தியை நெறிப்படுத்துவதற்கான திட்டம்
சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படும் கரிமப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காக சர்வதேச வர்த்தக ஆணையமும் நுகர்வோர் விவகார ஆணையமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இது சர்வதேச வர்த்தக ஆணையத்திற்கும் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கும் இடையிலான கலந்துரையாடலின் போது நடந்தது. சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு தற்போதுள்ள சட்டங்களை புதுப்பிப்பதே முக்கிய நோக்கம் என்று அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நுகர்வோரை தவறாக வழிநடத்தாமல், தேவையான தரமான பொருட்கள் சந்தையில் நியாயமான விலையில் விற்கப்படுவதை உறுதி செய்வதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்…