நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.
இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உட்பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், போக்குவரத்துக்கு மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு மன்ஹெய்ம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு…

