Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனத்தின் VIMAN Ja-Ela குடியிருப்புத் திட்டத்தின் இறுதிக் கட்டம் ஆரம்பம்
ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனம் நிர்மாணித்து வரும் முக்கியமான புறநகர் சமூகக் குடியிருப்புத் திட்டமான VIMAN Ja-Ela இன் 4வது மற்றும் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த சிறப்புமிக்க குடியிருப்புத் திட்டத்தில் குடியிருப்பாளராக மாற விரும்புவோருக்கான இறுதி வாய்ப்பும் வழங்கப்படுகிறது. முந்தைய கட்டங்களுக்கு காணப்பட்ட வலுவான கேள்வியைத் தொடர்ந்து, திட்டத்தின் இறுதிக் கட்டமாக அமைந்துள்ள 4வது கட்டத்தின் விற்பனை நடவடிக்கைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே VIMAN Ja-Ela, வெறும் இல்லங்களை வழங்கும் ஒரு திட்டமாக அல்லாது, முழுமையான வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கும் குடியிருப்புச் சூழலாக தன்னை நிலைநாட்டி வருகிறது. பாதுகாப்பும் திட்டமிடப்பட்ட வடிவமைப்பும் இணைந்த சூழலில், வசதி, எளிதான போக்குவரத்து அணுகல் மற்றும் நவீன புறநகர் வாழ்க்கைமுறைக்கு ஏற்ற அமைப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 4வது கட்டத்தின் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், ஏற்கனவே உருவாகியுள்ள வளமான அயல்சூழலில் இணைந்து கொள்ள விரும்பும் வீடு கொள்வனவு செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. 4வது கட்டத்தின் கீழ், திறந்த மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய உட்புற வடிவமைப்புகளுடன், தாராளமான இயற்கை வெளிச்சத்தை பெற்ற இரண்டு மற்றும் மூன்று படுக்கை…
