இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

தெற்கு ஆசியாவில் முதல் AI இயக்க MRI ஸ்கேனரை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நவலோக்க
இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனை, தெற்கு ஆசிய சுகாதாரத் துறையில் AIஆல் இயக்கப்படும் முதல் MRI ஸ்கேனர் இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது, இது நாட்டின் சுகாதாரத் துறையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். கடந்த மார்ச் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, சுகாதார கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட நோயாளர் பராமரிப்பில் ஒரு முன்னோடியாக தனது சிறப்பினை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த நவலோக்க மருத்துவமனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. 4.5 மில்லியன்…